வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்கள் கட்டுப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களும்,ஆலோசனைகளும் பெறல்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Dec 16, 2024, 3:37:46 AM
எருமைகள்>காட்டுப்பன்றிகள் மற்றும் குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்கள் கட்டுப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களையும்>ஆலோசனைகளையும் பெறுவதற்கு விவசாய>கால்நடைகள்>காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.
ALSO READ | ராஜினாமா ஏன்? - ஆதவ் அர்ஜுனாவின் விளக்கம்
காட்டுப்பன்றிகள்>மயில்களினால் விவசாயம் மற்றும் தோட்டப் பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்படுவதாகவும்>வருடமொன்றில் 30 பில்லியன் ரூபாய்கள் வரை இப்பயிர்களின் சேத விபரங்கள் மதிப்பிடப்படுவதாகவும் தெரியவருகின்றது.
அதே வேளை காட்டு யாணைகளினாலும் வாழை.பப்பாசி>மற்றும் தென்னை செய்கைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிவருகின்றமை தினந்தோறும் செய்திகளாக வெளிவந்தமுள்ளன.
பயிர்களின் சேதங்களை பாதுகாப்பது தொடர்பில் அண்மையில் அமைச்சர் லால் காந்த அவர்களினால் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் ஆதரவாகவும்,எதிராகவும் கருத்துக்கள் பல தரப்பினராலும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.