பலஸ்தீன விடுதலை போராளிகளை கோழைத்தனமாகவும் கொன்றது போல் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை யார் சதி செய்தாலும் கொல்ல முடியாது
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Aug 1, 2024, 5:49:49 AM
இஸ்மாயில் தஹ்னியை கொடூரமாகவும் கோழைத்தனமாகவும் கொன்றது போல் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை யார் சதி செய்தாலும் கொல்ல முடியாது என்பதை இஸ்ரேலியர்களும், அவர்களுக்கு ஆதரவானவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும்.
பாலஸ்தீன விடுதலைக்காக தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் தியாகம் செய்தார் இஸ்மாயில் ஹனி. அத்தகைய மாவீரனின் மரணத்திற்காக முஸ்லிம் பள்ளிவாசலில் காயீப் ஜனாஸா தொழுகையில் ஈடுபட்டு அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் பெரிய சொர்க்கம் கிடைக்க முஸ்லிங்கள் கையேந்தி பிரார்த்திப்போமென ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
ALSO READ | இந்த வழக்கை கரூரில் உள்ள யார் செய்ய சொல்லி இருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் - எம் ஆர் விஜயபாஸ்கர்.
அவரது ஊடக அறிக்கையில் மேலும்,
ஹமாஸ் என்பது பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பாகும். அதன் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஜனநாயக நாடு என்று அழைக்கப்படும் இஸ்ரேலின் ஆதரவுடன் ஒரு கோழைத்தனமான ட்ரோன் பயங்கரவாத தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஈரானின் புதிய அதிபரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ஈரான் வந்த இராஜதந்திர விருந்தினருக்கு ஈரான் இஸ்லாமிய குடியரசு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த கொலையை இஸ்ரேல் எவ்வளவு திட்டமிட்டுள்ளது என்பதை நாம் இங்கு காணலாம்.
இந்த கொலையின் மூலம், பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் இருந்து ஈரானையும் அவர்களின் ஆதரவாளர்களையும், ஹிஸ்புல்லா மற்றும் ஹுதி போராளிக் குழுக்களில் இருந்து அகற்றி, ஈரானை முஸ்லிம் உலகில் இருந்து துரோகியாகத் தனிமைப்படுத்த இஸ்ரேல் நம்புகிறது. திரைக்குப் பின்னால், மத்திய கிழக்கில் உள்ள சில அரபு ஷேக்குகள் இஸ்ரேலில் அந்த நம்பிக்கையை மலரச் செய்ய சதி செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஈரான் மற்றும் அவர்களின் ஹிஸ்புல்லா மற்றும் ஹுதி படையினர் தங்கள் மத்திய கிழக்கு கொடூர அரசுகளுக்கு எதிராக எதிர்காலங்களில் சவால் விடக்கூடும் என்பதே இதற்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.