சன்மார்க்கம் சம்பந்தமான பிரச்சினைகள் வருகின்ற போது அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபையின் கருத்துக்களை பெற்று அது தொடர்பில் செயற்பட்டுவந்துள்ளோம் என்கின்றார் மரைக்கார்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Nov 1, 2024, 6:07:37 PM
கடந்த காலத்தில் பாராளுமன்றத்துக்குள்ளும்,வெளியிலும் நாம் சமூகம் சார்ந்த விடயங்களுக்காக குரல் கொடுத்ததினாலேயே மக்கள் எமக்கான அங்கீகாரத்தினை வழங்கியதாக தெரிவித்துள்ள கொழும்பு மாவட்ட ஜக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் எதிர்வரும் பாராளுமன்றமானது மிகவும் கடினமானதாக அமையும் என்பதனையும் இதன் போது சுட்டிக்காட்டுவதாகவும் கூறினார்.
இன்றைய தினம் கொழும்பு தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸ வர்த்தக மற்றும் புத்தி ஜீவிகளுடனான கூட்டமொன்று ரோஸ்வூட் மண்டபத்தில் இடம் பெற்ற போது இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் இதன் போது கருத்துரைத்த எஸ்.எம்.மரைக்கார் -
எமது சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகள் வருகின்ற போதெல்லாம் அதற்கு நாம் துணிந்து முகம் கொடுத்து கருத்துக்கள் மூலம் தெளிவினை கொடுத்துவந்துள்ளோம்.
குறிப்பாக சன்மார்க்கம் சம்பந்தமான பிரச்சினைகள் வருகின்ற போது அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபையின் கருத்துக்களை பெற்று அது தொடர்பில் செயற்பட்டுவந்துள்ளோம்.
எதிர்வருகின்ற பாராளுமன்றம் என்பது சவாலி மிகுந்ததாக அமையும் என்பது எதிர்பார்ப்பு,அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசுக்கு இன்னும் பாராளுமன்ற அதிகாரம் கிடைக்கவில்லை.இந்த தேர்தலின் பின்னர் தான் அவர்களது உண்மையான முகத்தை பார்க்க முடியும் என்ற எச்சரிக்கையினை மக்களுக்கு சொல்லுவது எமது கடமையாகும்.
பாராளுமன்றத்துக்குள் எமது சமூகத்திற்காகவும்,இது போன்று பாதிக்கப்படும் மக்களுக்கு குரல் கொடுக்க மக்கள் பிரதி நிதிகள் இருக்க வேண்டும்.இல்லாதவிடத்து அனுபவமின்மையானவர்கள் வருகின்ற போது அவர்கள் தலைமைகளினால் கட்டுப்படுத்தப்படுவார்கள்,இது பெரும் ஆபத்தானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படியானவர்களால் எதிராக ஒரு வார்த்தையினை கூட பேச முடியாது போகும் என்பதை வாக்காளர்கள் புரிந்து தமது வாக்குகளை கவனமாக தூர சிந்தனைக் கொண்டு அளிக்க வேண்டு; என்றும் இதன் போது அவர் வேண்டிக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான்,மற்றும் வேட்பாளர் சன்ன விகும் உள்ளிட்டோரும் பிரசன்னமாகியிருந்தனர்.