• முகப்பு
  • இலங்கை
  • அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களால் கே.எஸ்.குகதாசன் MP க்கு வரவேற்பு

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களால் கே.எஸ்.குகதாசன் MP க்கு வரவேற்பு

ஏ. எம். கீத் - திருகோணமலை

UPDATED: Nov 20, 2024, 6:45:54 AM

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்கோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்களுக்கு அறநெறிப் பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்களால் வரவேற்பு நிகழ்வு ஒன்று மூதூர் சகாய புறத்தில் நடைபெற்றது.


இந்து மன்றத் தலைவர் தவத் திரு பாஸ்கரன் குருக்கள் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. 

 அறநெறிப் பாடசாலைகளில் பாடம் புகட்டும் 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன், மேற்படி பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை கே.எஸ்.குகதாசன் MP கேட்டறிந்ததுடன் அவற்றுக்கான தீர்வுகளை மிக விரைவில் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

 

VIDEOS

Recommended