• முகப்பு
  • இலங்கை
  • இரத்தினபுரி பகுதியில் தொடரும் தோட்ட அதிகாரிகளின் அடாவடித்தனம் - விசாரனைக்கு ஜீவன் வேண்டுகோள்

இரத்தினபுரி பகுதியில் தொடரும் தோட்ட அதிகாரிகளின் அடாவடித்தனம் - விசாரனைக்கு ஜீவன் வேண்டுகோள்

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: May 9, 2024, 7:02:11 PM

இரத்தினபுரி தும்பறை 82ம் பிரிவில் உள்ள தோட்ட அதிகாரி மற்றும் காவலாளி ஆகியோர் இணைந்து தோட்ட தொழிலாளர்களை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு நீர்வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்  வேண்டுகோளினை  விடுத்துள்ளார். 


இரத்தினபுரி தும்பறை 82ம் பிரிவில் உள்ள தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பி.சக்திவேல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத்தலைவர் சின்னையா இராஐமணி ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

மேலும் தாக்குதலுக்கு உள்ளான ஒரு ஆண் தொழிலாளி மற்றும் ஒரு பெண் தொழிலாளி ஆகிய இரண்டு பேரும் இரத்தினபுரி பொலிஸாரின் பாதுகாப்போடு பலத்த காயங்களோடு இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர் அதேவேலை தாக்குதல் நடாத்திய தோட்ட அதிகாரிகளை பொலிசார் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக இ.தொ.கா.வின் தேசிய அமைப்பாளர் பி.சக்திவேல் மேலும் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் சிறும்பான்மை மக்கள் பெரும்பான்மை மக்களினால் அச்சுருத்தப்பட்டு தாக்கப்படுகின்ற சம்பவம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது இது போன்ற சம்பவம்?? இனிமேலும் இடம் பெறக்கூடாது இருந்த போதிலும் இந்த தாக்குதல் சம்பவத்தை இ.தொ.கா.வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended