இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவின் 'Beechcraft King Air 360ER' விமானம்
ஐ. ஏ. காதிர் கான்
UPDATED: Sep 8, 2024, 2:50:03 PM
இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 'Beechcraft King Air 360ER' விமானம், அடுத்தவாரம் இலங்கையை வந்தடைகிறது.
ALSO READ | சோர்வு காரணமாக அநுர குமாரவுக்கு சுகவீனமாம்
அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் 'Building Partner Capacity' நிகழ்ச்சித் திட்டத்தினால் நிதியளிக்கப்பட்ட மற்றும் 2019 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்நன்கொடையானது, இலங்கை விமானப் படையுடன் காணப்படும் நீண்ட கால ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும்.
தேடுதல், மீட்பு நடவடிக்கைகள், போதைப் பொருள் தடுப்பு, கடத்தல்' மற்றும் 'கள்ளக் கடத்தலை முறியடித்தல்' ஆகிய விடயங்களில், இலங்கையின் திறன்களை அதிகரிக்கும் வகையில், இம்மேம்படுத்தப்பட்ட விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நன்கொடையானது, அமெரிக்க - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பினை மேலும் வலுப்படுத்தும் அதேவேளை, இந்நாட்டின் கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் இது கணிசமாக மேம்படுத்தும்.இ
லங்கை விமானப்படைக்கு எவ்வித செலவுகளு மின்றி, அமெரிக்க அரசினால் வழங்கப்படும் 19 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியுடைய இம்மானியமானது, விமானம் மற்றும் அதற்குத் தேவையான உதவிச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்குகிறது.
இவ்விமானம், அடுத்தவாரம் இலங்கையை வந்தடைந்ததும், திருகோணமலை சீனக்குடாவிலுள்ள 'Maritime Patrol Squadron 3' உடன் இணைந்து கொள்வதற்கு முன்பாக, இரத்மலானையிலுள்ள விமானப்படைத் தளத்தில் மேலதிக பயிற்சி மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்கு உட்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.