விமான நிலையத்தில் மூன்று கோடி பெறுமதியான தொலைபேசியுடன் இலங்கையர்கள் இருவர் கைது
எஸ்.எம்.எம்.முர்ஷித்
UPDATED: May 17, 2024, 5:49:43 PM
டுபாய் நாட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மூன்று கோடி பெறுமதியான கையடக்க தொலைபேசியுடன் இலங்கையர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் .
ALSO READ | பாராளுமன்றம் மே 22 ஆம் திகதி கூடவுள்ளது
இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு 13 பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடையவரும், 28 வயதான இருவரும் துபாய் நாட்டில் இருந்து இலங்கைக்கு தொலைபேசி கொண்டுவரப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் சுங்க திணைக்களத்திற்கு பொருட்களை கொண்டுவருவதற்கான அனுமதி கட்டணம் செலுத்தாது சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்துள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனையின் போது மூன்று கோடி பெறுமதியான 1084 கையடக்க தொலைபேசிகளை கைப்பற்றியுள்ளனர் .
ALSO READ | வைகை அணையில் தண்ணீர் திறப்பு
கைப்பற்றப் பொருட்கள் விமான நிலைய சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது..