தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பளம் தொடர்பான இரண்டு வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளது
ராமு தனராஜா
UPDATED: Jun 25, 2024, 5:51:54 PM
மே மாதம் 21ஆம் தேதி வருத்தமானியை நடைமுறைப்படுத்துமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் போது தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
காரணம் பெருந்தோட்ட நிறுவனங்கள் அந்த வர்த்தமானியை ரத்து செய்ய வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குக்கு அமைய கடந்த இரு வாரங்களுக்கு முன்பதாக. அறிவிக்கப்பட்டதோடு 1700 ரூபாய் சம்பளத்தை வழங்குமாறு அந்த வர்த்தமானையின்படி நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வழக்கு தொடர்ச்சியாக நடந்து கொண்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
ALSO READ | தினம் ஒரு திருக்குறள். 26-06-2024
அதற்கு அமைய பெருந்தோட்ட கம்பெனிகள் ஒரு நாள் சம்பளத்தை 1700 ரூபாய் வழங்க வேண்டும் என சட்டபூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இருந்தும் கூட வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது போல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக பெருந்தோட்ட கம்பெனிகள் தற்போது உயர் நீதிமன்றத்தை நாடி உள்ளது.
அந்த உயர்நீதிமன்றத்தில் வழக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளதாக எனக்கும் அறிவித்தல் கிடைத்துள்ளது.
குறித்த வழக்கின் என்னையும் ஒரு குற்றவாளியாக கருதி இந்த அறிவித்தல் கிடைத்துள்ளது.
மக்களுடைய உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்ற வகையில் நாட்டினுடைய சுயாதீனமான நீதிமன்றம் நியாயமான தீர்ப்பை எமத மக்களுக்கு வழங்கும் என்று நானும் எதிர்பார்க்கிறேன்.
மக்களை வஞ்சித்துக் கொண்டு செயல்படுவதற்கு எனக்கும் எனது சங்கத்திற்கும் உடன்பாடு இல்லை மக்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்குமாறு பல அழுத்தங்கள் அரசாங்கத்திற்கும் பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியும் கொடுத்து செயல்பட்டது எனது மக்களுக்கு தெரியும் அதே போன்று அதை நடைமுறைப்படுத்தப்படுவதற்கும் ஜனாதிபதியுடன் எவ்வாறு வாதாடினேன் என்பதும் எனது மக்களுக்கு தெரியும்.
இது தற்போது வெளிப்படையாக வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே எனது மக்களுக்கு என்ன கொடுத்தாலும் பரவாயில்லை எனது மக்களுக்கு கிடைத்தால் போதும் என்று நான் எனது பங்களிப்பை வழங்கிய செயற்பட்டு கொண்டிருக்கின்றேன்.
எங்களது சங்கத்தை பொருத்தவரையில் எனது மக்களை வஞ்சித்தோ நாள் சம்பளத்தை இல்லாமல் செய்தோ பெறவேண்டிய அவசியம் கிடையாது நான் பாராளுமன்ற உறுப்பினர் எங்களது சக்தியை அரசாங்கத்துடன் காண்பிப்போம் நீதியை நிலை நாட்டுவதற்கு நீதிமன்றத்திற்கு செல்வதற்கு தயாராக இருக்கின்றோம் என்றார்.