ஹப்புத்தளை நகரில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதி
ராமு தனராஜா
UPDATED: Oct 29, 2024, 3:28:43 PM
இன்று மதியம் ஹப்புத்தளை நகரில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று வயது குழந்தையும் 37 வயதுடைய தந்தையுமே இவ்வாறு விபத்தில் காயமடைந்து ஹப்புத்தளை பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று மதியம் கொழும்பு பக்கம் இருந்து பதுளை நோக்கி வந்துகொண்டிருந்த லொறி ஒன்றில் வீதியை கடக்க முற்படட்ட குறித்த இருவரும் லொறியில் மோதுண்டு காயமடைந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளானவர்கள் பாலகொல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் ஹப்புத்தளை பகுதியில் உள்ள உறவினர் வீடொன்றிற்கு வந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு