நாளை வெள்ளிக்கிழமை ஜுமுஆ குத்பாக்களை "சுற்றுச் சூழலை பாதுகாப்போம் தலைப்பில் நடத்துங்கள் - புத்தளம் நகரக் கிளை
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Sep 5, 2024, 2:20:27 PM
ஜூமுஆ மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் ஜுமுஆ நடாத்தக்கூடிய உலமாக்களுக்கு 06.09.2024 குத்பா தலைப்பு சம்பந்தமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவரையும் அவன் விரும்பும், பொருந்திக் கொள்ளும் பணிகளுக்காக கபூல் செய்து கொள்வானாக. ஆமீன்!
கொழும்பிலிருந்து குப்பைகளை மீண்டும் புத்தளம் அறுவக்காட்டுக்கு கொண்டுவரப்படுகின்றது. இவ் விடயத்தை கவனத்தில் கொண்டு கிளீன் புத்தளம், சர்வமதக்குழு. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகம் ஒன்றிணைந்து அறுவக்காடு குப்பைத் திட்டத்தை நிறுத்துவதற்கு பல முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனவே இவ்விடயத்தில் அனைத்து மக்களும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற நோக்கில் எதிர்வரும் 06.09.2024 வெள்ளிக்கிழமை ஜுமுஆ குத்பாக்களை "சுற்றுச் சூழலை பாதுகாப்போம் மற்றும் அறுவக்காடு குப்பைத் திட்டத்தால் ஏற்படும் சூழல் அச்சுறுத்தல்" என்ற தலைப்புகளில் ஜூமுஆ உரை நடாத்துமாறு ஜூமுஆ நடாத்தக்கூடிய உலமாக்களிடத்திலும் (கதீப்மார்கள்) மற்றும் ஜூமுஆ மஸ்ஜித் நிர்வாகத்தினரிடமும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஜூமுஆ விவகாரப் பிரிவு பணிவாக வேண்டுகிறது.
குறிப்பு : அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் எல்லை: கரிகட்டை - கரைத்தீவு வரை