தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு கால அவகாசம்
ஐ. ஏ. காதிர் கான்
UPDATED: Jun 23, 2024, 2:03:32 AM
பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால், இதுவரை தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டடோருக்கு, அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான இறுதிச் சந்தர்ப்பம், தேசிய ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், பிறப்புச் சான்றிதழ் இல்லாத 40 வயதுக்கு மேற்பட்டோர், தமது தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம், இம்மாதம் 30 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளதாக, தேசிய ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப, கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், பிரதேச செயலாளர்களின் கோரிக்கைகளைக் கருத்திற் கொண்டு, இது தொடர்பான விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கான கால அவகாசம் இம்மாதம் 30 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளதாகவும், தேசிய ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு