லொறி ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பலத்த காயம்
ராமு தனராஜா
UPDATED: Aug 21, 2024, 1:36:11 PM
பதுளை தென்னேபங்குவ பிரதான வீதியில் வெந்தேசி வத்தை பகுதியில் லொறி ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்துக்குள்ளான லொறியில் பயணித்த மூவரும் கந்தகெட்டிய 21 ம் கட்டையை சேர்ந்த நபர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த லொறியின் வேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமையே விபத்துக்கான காரணம் என பதுளை தலைமையக பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் தெரிவித்தனர்.
காயமடைந்த மூவரும் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலதிக விசாரணைகளை பதுளை தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு