ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கார் விபத்தில் மரணம்
இர்ஷாத் ரஹ்மதுல்லா
UPDATED: Apr 21, 2024, 8:08:51 AM
அல்பிட்டிய – அவிட்டாவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியொன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் 68 வயதான முச்சக்கரவண்டி சாரதியும் அவரது 10 வயது பேரனும் ஏழு வயது பேத்தியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கரவண்டியில் பயணித்த உயிரிழந்தவரின் மனைவி, மகள் மற்றும் 18 வயது பேரன் ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு