• முகப்பு
  • இலங்கை
  • வேதன அதிகரிப்பை போராட்டங்களின் மூலம் மாத்திரமே பெற்றுக்கொள்ள கூடிய ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது

வேதன அதிகரிப்பை போராட்டங்களின் மூலம் மாத்திரமே பெற்றுக்கொள்ள கூடிய ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Jun 16, 2024, 11:07:48 AM

ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்துக் கொடுக்க வேண்டும் என்பது தொழிற்சங்கங்களுக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேள னத்துக்கும் இடையில் காணப்படும் ஒப்பந்தமாகும்.

original/img-20240616-wa0127
இவ்வாறு வழங்கப்பட வேண்டிய வேதன அதிகரிப்பை போராட்டங்களின் மூலம் மாத்திரமே பெற்றுக்கொள்ள கூடிய ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், முன்னாள் மாநகர சபை உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் களுத்துறை மாவட்ட அபிவிருத்தி பொறுப்பாளருமான திருக்கேஸ் செல்லச்சாமி தெரிவித்தார்.

 1700 ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பிலும் அதுபோன்று களுத்துறை மாவட்ட அபிவிருத்தி தொடர்பிலும் இங்கிரியவில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நீதிமன்றம் 1700 ரூபாய் சம்பளத்தை வழங்குமாறு கட்டளை வழங்கி இருந்த பொழுதும் இது தொடர்பில் சில கம்பெனிகள் அந்த அதிகரித்த சம்பளத்தை வழங்குவது காண முடிகிறது. சில கம்பெனிகள் கால அவகாசம் கோறி யிருக்கிறது. இந்த கால அவகாசம் அடுத்த சம்பளத்துக்கு முன்பதாக வழங்கப்படாவிட்டால் நாங்கள் நேரடியாக இந்த கம்பெனிகளின் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது தொடர்பில் அது கூடிய கவனம் செலுத்த நேரிடும் என்பதை இங்கு கூறி வைக்க விரும்புகிறேன் என்றும் இந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறினார்.

  மேல் மாகாண இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைப்பாளர் கரு பத்மநாதன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஹெட்டன் நகர முன்னாள் அமைப்பாளர் சுப்ரமணியம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

VIDEOS

Recommended