அகில இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒன்றியத்தின் போராட்டம்
ஏ.எஸ்.எம்.ஜாவித்
UPDATED: Jun 22, 2024, 5:19:42 PM
பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்ட அகில இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒன்றியத்தின் போராட்டம் தொடர்கின்றது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ காலத்தில் 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 11 துறைகளில் நியமனம் வழங்கும் திட்டத்தின் கீழ் சுமார் 22 ஆயிரம் பேர் தமது விருப்பத்தின் அப்படையில் கிராமிய மற்றும் தோட்டப்பாடசாலைகளில் நியமனம் பெறலாம் என்ற துறையில் விருப்பம் தெரிவித்தமைக்கு அமைய இந்த 22 ஆயிரம் பேரும் நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமித்தார்.
இவ்வாறு நியமிக்கப்பட்ட நாங்கள் சுமார் 4 வருடங்களாக கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் தம்மை ஆசிரியர் பணிக்காகன நியமனம் வழங்குவதாக குறிப்பிட்டு வந்தபோதிலும் தமக்கான நியமனங்கள் இதுவரை வழங்கப்பட்டவில்லை என்றும் தம்மை வேறு வேலைத் திட்டங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் அதில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும் அதற்கு எதிராகவே அவர்கள் தற்போது கவனயீர்ப்பு போராட்டங்களை நடாத்தி வருவதாகவும் கவளை தெரிவிக்கின்றனர்.
இன்று சனிக்கிழமையுடன் 13 வது நாளாகவும் கொழும்பு கோட்டை புகையிர நிலையத்திற்கு முன்பாக பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்ட அகில இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒன்றியத்தின் நாடளாவிய ரீதியில் உள்ளவர்கள் இணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவிப்பதுடன் இதுவரை அரசின் சார்பாக எவரும் தமது பிரச்சினைகளைக் கேட்டறியவில்லை என்றும் தெரிவிக்கும் அவர்கள் தமக்கான உரிய நியமனத்திற்கான உத்தரவாதம் கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.