• முகப்பு
  • இலங்கை
  • பெருந்தோட்ட நிறுவனங்களின் சக்தி தற்போது மக்கள் சக்தியாக மாரியுள்ளது - அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

பெருந்தோட்ட நிறுவனங்களின் சக்தி தற்போது மக்கள் சக்தியாக மாரியுள்ளது - அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

அமைச்சரின் ஊடகப் பிரிவு

UPDATED: Jun 14, 2024, 12:38:44 PM

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைத்த 1700ரூபாய் சம்பள வெற்றியானது பெருந்தோட்ட நிறுவனங்களின் சக்தி மக்கள் சக்தியாக உருவெடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

original/img-20240614-wa0087
கண்டி மாவட்டம் ஹேவாஹெட்ட பிரதேச சபைக்குற்பட்ட பட்டகல கிராம மக்களுக்கு குடி நீர் திட்டத்தை உத்தியோக பூர்வமாக வழங்கி வைத்து மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். 

பட்டகல கிராம மக்களின் இடைவிடா முயற்சியினாலும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் நிதி ஒதுக்கீட்டினூடாகவும் இச்செயத்திட்டமானது நிறைவுப்பெற்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அனுராதா ஜெயரத்ன தேசிய நீர்வளங்கள் வடிகால் அமைப்பின் உபதலைவர் சஞ்ஜீவ விஜயகோன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, கண்டி மாவட்டத்திற்கு பொறுப்பான தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர். 

original/img-20240614-wa0090
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் நாட்டின் ஜனாதிபதி ஊடாக அஸ்வெசும 20இலட்ச்சம் பேருக்கு கானி உரிமை என்பன கிடைக்கப்பெற்றுள்ளது எதிர்கட்சியினரை பொருத்தவரையில் இயலாது, கிடையாது, வேண்டாம் இந்த மூன்று வார்த்தைகளை மாத்திரம் பிரயோகித்து வருவார்கள் அதனை ஜனாதிபதி அவர்கள் சாதித்து காட்டியிருக்கிறார் 


தேர்தல் ஒன்று வரும்போது மக்களின் பலம் என்ன வென்று மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் மக்களிடம் சென்று வாக்கு கேட்பவர்கள் மக்களுக்கு என்ன வேளைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர் என அவதானம் செலுத்த வேண்டும் நாம் எரிவாயிவிற்கும் எரிப்பொருளுக்கும் மக்கள் பட்ட கஷ்டங்களை ஒருபோதும் மக்கள் மறக்கமாட்டார்கள் என நான் நம்புகிறேன் 

கொரோனா காலப்பகுதியில் சில அரசியல்வாதிகள் நினைத்தார்கள் மக்கள் இறந்து விடுவார்கள் என்றும் அப்போது தான் அரசாங்கம் தோல்வியடையும் என்றும் என்னியிருந்தனர். அதன் பிறகு நாட்டில் அரசியல் பிரச்சினை ஒன்று ஏற்பட்டது அதன் போது நிறையபேர் நினைத்தனர் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களுக்கு ஏதாவது நடக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க அவர்கள் நாட்டை பொறுப்பேற்றவுடன் எதிர்கட்சியினர் எவரும் நாட்டை கடடியெழுப்ப ஜனாதிபதி அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

original/img-20240614-wa0088
நுவரெலியா மாவட்ட மக்களுக்கு அன்மையில் ஒரு பிரச்சினை ஏற்பட்டப்போது நான் அங்கு சென்றேன் அப்போது ஊடக நண்பர்கள் நான் அடாவடி அரசியல் செய்ததாக செய்திகள் ஒழிபரப்பபட்டது. ஆனால் அங்கு மக்களுக்கு நடந்த அநீதிகளை ஊடகங்கள் வெளிபடுத்தவில்லை அனுரகுமார திஷாநாயக்க கூறியிருந்தார் அடாவடி அரசியலை நாங்கள் ஒருபோதும் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டோம் என கூறினார். தொழிலாளர்களுக்கு குரல் கொடுப்பதாக அடிக்கடி பேசுவார் ஆனால் பெருந்தோட்ட நிருவனங்களுக்கு விலைபோய்விட்டார்.

 

நான் ஒருபோது பாராளுமன்றத்தை தீ வைப்பேன் என கூறவில்லை ஜனாதிபதி மளிகையை கைபற்றுமாறு கூறவில்லை மக்கள் கஷ்டத்தில் இருக்கும் போது நான் போய் டீல் பேசவில்லை நான் ஒருபோதும் மாற்று கட்சியினரை பற்றி பேசியதில்லை மூத்த உறுப்பினர் ஒருவர் மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதை விட மக்களுக்கு என்ன செய்தார் என மக்கள் மத்தியில் சென்று சொல்ல வேண்டும். 


எதிர்கட்சி தலைவர் 13வது திருத்தத்தை அமுல்படுத்த போவதாக யாழ்ப்பாணத்தில் வைத்து கூறியிருந்தார். 13வது சீர் திருத்தம் என்பது ஒரு தவரான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது இந்த சீர் திருத்தம் என்பது யாழ்ப்பாண மக்களுக்கு மாத்திரமல்ல நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் அது எந்த சட்டமாக இருந்தாலும் மக்களுடைய ஆனையின் கீழ் கொண்டுவரப்படும் 

கடந்த வருடம் ஜீலைமாத காலப்பகுதியில் ஜனாதிபதி அவர்கள் ஒரு ஆவனத்தினை தயார் செய்தார் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது அந்த கலந்துரையாடலுக்கு எதிர் கட்சி தலைவர் வருகை தரவில்லை அது பற்றி பேசும் போது ஒரு சந்தேகம் ஏழுந்துள்ளது என குறிப்பிட்டார்.

 

VIDEOS

Recommended