தோட்டத் தொழிலாளர்களது ஒருநாள் வேதனம் 2000 ரூபாவாக இருக்க வேண்டும். ஜே.வி.பி யின் மலையக அமைப்பு வேண்டுகோள்
ஜே.எம். ஹாபீஸ் - கண்டி
UPDATED: May 31, 2024, 9:50:35 AM
புதிய இலங்கை,, புதிய அரசியல், புதிய பிரயானம் என்ற மூன்று எண்ணக்கருக்களுடன் தேசிய மக்கள் சக்தி மலையகப் பிரதேசத்தில் இயங்க உள்ளது என தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழு அங்கத்தவரும், மனித அபிவிருத்தித் தாபனத்தின் பணிப்பாளருமான கலாநிதி பீ.பீ. சிவப்பிரகாசம் தெரிவித்தார்.(31)
கண்டி டெவோன் ஹோட்டலில் இடம் பெற்ற ஊடக மாநாட்டின் போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது-
எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை மலையக மக்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கூட்டம் ஒன்று கண்டி, கட்டுகலை செல்வ விநாயகர் கோவில் வளவில் அமைந்துள்ள மீனாட்சி மண்டபத்தில் இம் மாநாடு கலை 9 மணிக்கு இடம் பெற உள்ளது.
இதில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற அங்கத்தவர் அனுரகுமார திசாநாயக்கா, தேசிய மக்கள் சக்தியின் தொழிற்சங்க வாதியான கே.டி. லால்காந்த உற்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
எனவே மலையக மக்களை அதற்காக அன்புடன் அழைக்கிறோம் எனத் தெரிவித்தார்.
இன்று பேசுபொருளாக இருப்பது மலையக தோட்டத் தொழிலாளர்களது சம்பள விடயமாகும். அரசு 1700 ரூபா என அறிவித்தாலும் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு குறைந்தது 2000 ரூபாவாவது ஒரு நாளைக்கு வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் சந்திர குமார் மற்றும் கோனேஸ்வரன் ஆகியேரும் கருத்து தெரிவித்தனர்.