• முகப்பு
  • இலங்கை
  • அடித்தள மக்களுக்கான அபிவிருத்தி உதவிக்கரம் தொடர்பிலான முதலாவது செயலமர்வு

அடித்தள மக்களுக்கான அபிவிருத்தி உதவிக்கரம் தொடர்பிலான முதலாவது செயலமர்வு

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Jun 24, 2024, 9:15:26 AM

ஜப்பான்  சர்வதேச தொழில் மன்றம் ஏற்பாடு செய்திருந்த அடித்தள மக்களுக்கான அபிவிருத்தி உதவிக்கரம் தொடர்பிலான முதலாவது செயலமர்வு கொழும்பு ரேனுகா சி்ட்டி ஹோட்டலில் இன்று இடம் பெற்றது.

இதில் தற்போதைய தொழில் மன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன்,கலந்து கொண்ட பல துறை நிறுநுவன பிரதி நிதிகளினால் கருத்துக்களும் முன் வைக்கப்பட்டன.

இந்த செயலமர்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் பங்கேற்ற அதனது பிரதம சட்ட ஆலோசகர் கா.மாரிமுத்த தற்போதைய செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

இன்றை முதலாவது இக் கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் தமது கருத்துக்களை முன் வைக்க சந்தரப்பம் கிடைத்தமைக்கு நன்றி தெரிவிப்பது பொறுத்தமாகும்.

நீண்டகால இலங்கை – ஜப்பான் பாரம்பரிய உறவுகளுக்கு அப்பால் அரசியல்,கலாச்சார,பண்பாட்டு உறவுகளுடன்,ஜப்பானிய முதலீடுகள் இலங்கையின் செழிப்புக்கு உதவியுள்ளது.

அண்மையில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் கொடுக்க தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளமை இந்த தருனத்தில் நினைவு கூறுவது பொருத்தமாகும்.என்றும் இதன் போது அவர் கூறினார்.

 இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு கருத்துரைத்த இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதம சட்ட ஆலோசகர் கா. மாரிமுத்து

( vedio இணைக்கப்பட்டுள்ளது )

 

VIDEOS

Recommended