வெளிநாட்டினருக்கு இணையவழி விசா வழங்குவது தொடர்பான கலந்துரையாடலில் முக்கிய அதிகாரிகள் இல்லாதது குறித்து நிதிக் குழு கடும் அதிருப்தி வெளியிட்டது.
இர்ஷாத் ரஹ்மதுல்லா
UPDATED: May 17, 2024, 5:29:12 AM
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான இணையவழி விசா வழங்குவது தொடர்பான கலந்துரையாடலுக்கு பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் வருகை தராதமை தொடர்பில் அரசாங்கத்தின் நிதிக்குழு தனது கடும் அதிருப்தியை வெளியிட்டது.
முன்னதாக குழு கூடிய போது இந்த அமைச்சு மற்றும் திணைக்கள அதிகாரிகள் இன்று குழுவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருந்த நிலையில் திடீரென நேற்று மாலை நோட்டீஸ் வழங்கி இன்று குழுவிற்கு சமூகமளிக்காதது குழுவை அவமதிக்கும் செயலாகவே காணப்படுவதாக குழுவின் தலைவர் டாக்டர்) ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.
அலுவலக நேரத்தின் பின்னர் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் சாக்குப்போக்கு கூறப்பட்ட உண்மையை அங்கீகரிக்க முடியாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக, இலங்கைக்கு வரும் வெளிநாட்டினருக்கான விசா விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட முகவராக GBS-IVS மற்றும் VFS Global நிறுவனங்களை நியமிப்பது குறித்து ஆலோசிக்க இந்த அமைச்சு மற்றும் திணைக்களத்தை மீண்டும் ஒரு நாள் குழுவிற்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) ஹர்ஷ டி சில்வா தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போது அரசாங்க நிதி தொடர்பான குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.