• முகப்பு
  • இலங்கை
  • ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை இடை நிறுத்தியது தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை இடை நிறுத்தியது தேர்தல்கள் ஆணைக்குழு

ஐ ஏ. காதிர் கான்

UPDATED: Sep 30, 2024, 3:52:12 PM

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, விவசாயிகளுக்கு 25,000 ரூபா உர மானியமும், மீனவர்களுக்கு எரிபொருள் மானியமும் வழங்குவதற்காக எடுத்த தீர்மானத்தை, தேர்தல்கள் ஆணைக்குழு இடை நிறுத்தியுள்ளது.

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான மானியத்தை வழங்கத் தீர்மானித்ததன் மூலம், ஏனைய வேட்பாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைக் கருத்திற்கொண்டு, குறித்த மானியம் வழங்கும் ஜனாதிபதியின் தீர்மானத்தை இடை நிறுத்துவதாக, தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, தேர்தலின் பின்னர் உரிய கொள்கைத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த மானியங்கள் நாளை (01) முதல்நடைமுறைப்படுத்தப்பட விருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த இரண்டு உத்தரவுகளையும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்தபோது நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை விடுத்திருந்த போதிலும், தேர்தல்கள் ஆணைக்குழு அதனை இடை நிறுத்தியிருந்தது எனவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதன்பிரகாரம், பொதுத் தேர்தலின் பின்னர் குறித்த மானியம் வழங்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.



VIDEOS

Recommended