• முகப்பு
  • இலங்கை
  • நாட்டில் தற்போதைய முதலாவது பணி மக்களிடையே மனிதாபிமானத்தை மீளக்கட்டி எழுப்புவதாகும்

நாட்டில் தற்போதைய முதலாவது பணி மக்களிடையே மனிதாபிமானத்தை மீளக்கட்டி எழுப்புவதாகும்

ஜே.எம்.ஹாபீஸ்

UPDATED: Oct 24, 2024, 8:46:08 AM

மனிதப்பண்பாடு மரணித்து விட்ட இந்த நாட்டில் மனிதாபிமானத்தை மீளக்கட்டி எழுப்ப வேண்டும் என கண்டி மாவட்ட என்.பி.பி. வேட்பளரும், இருதய சிகிட்சை விசேட வைத்தியர் நிபுணருமான ஹங்சக விஜயமுனி தெரிவித்தார். 

கண்டி 'ஓக்ரே ஹோட்டலில்' இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார். என்.பி.பி.ற்கு ஆதரவு திரட்டும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இவ் ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது-

இன்று இந்நாட்டில் மனிதாபிமானம் மரணித்து விட்டது. அதனை மீளக் கட்டி எழுப்புவதன் ஊடாகவே இந்நாடு இழந்துள்ள அனைத்து பெருமைகளையும், தேவைகளையும் அடைய முடியும். உதாரணமாக, எமது நாட்டில் இருந்த அறிஞர்கள் மற்றும் கல்வி கற்றவர்கள் ஆயிரக்கணக்கில் வெளிநாடுகளுக்க இடம் பெயர்ந்து விட்டனர்.

original/img-20241018-wa0351
அவர்களது திறன், அறிவு, ஆற்றல், அனுபவம் இவை அனைத்தும் ஒன்றுசேருமிடத்து எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு அது வலு சேர்க்கும் காரணியாக அது மாறிவிடும். ஆனால் கற்றவர்களில் சிலர் தமது மனித பண்பாடுகளை எல்லாம் தூக்கி எரிந்து விட்டு பணத்தின் பின்னால் செல்ல முற்பட்டு விட்டனர். 

அதே போல் அரச அதிகாரிகளும் தமது கடமைகளை மறந்து செல்வத்தின் பின்னால் ஓட ஆரம்பித்து விட்டனர். இதனால் எங்கு சென்றாலும் அங்கு மனிதாபிமானம் இல்லாத நிலை உண்டு. பணமீட்டும் வழியை மட்டும் சிந்திக்கும் மனிதர்கள் உருவாகும் நலமை ஏற்பட்டுள்ளது. வைத்திய சாலைக்கு நோயாளர்கள் சென்றால் அது ஆரம்பி்கும் இடம் முதல் முடியும் இடம் வரை மனதை நோகவைக்கும் வார்த்தைப் பிரயோகங்களே இடம்பெறுகின்றன. 

original/img-20241022-wa0079
காரியாலயங்களிலும் அவ்விதமே. அப்படியான இடங்களுக்கு செல்பவர்கள் தமது தன்மானத்தை பிரதான வாயிலில் வைத்து விட்டுத்தான் உள்ளே செல்லவேண்டிவரும். இல்லாவிட்டால் வீண் பிரச்சினைகள் ஏற்படும் என பயப்படுகின்றனர். இதில் உண்மைகள் இல்லாமல் இல்லை.

இவற்றை ஓரிரு நாற்களில் மாற்ற முடியாது. புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக வேண்டும். பழைய அரசியல் கலாச்சாரத்தில் இருந்து விடு பட வேண்டும். தற்போது அவ்வாறு விடுபட்ட நிலை மிக மெதுவாக வளர ஆரம்பித்துள்ளது. எனவே அதனை நாட்டில் கட்டி எழுப் வேண்டுமாயின் அதி உச்ச அரசியல் பலம் என்.பி.பி.ற்கு தேவைப்படுகிறது. 

அரசியல் பலம் அல்லது அரசியல் அதிகாரம் என்பது மக்களது பலமாகும். இதனை கடந்த 70 வருடமாக எமது மக்கள் உணராமல் இருந்தனர். சமூக அடிமைத்தனத்தில் இருந்து விடுபடவில்லை. பின்னர் கொவிட் காலத்தில் ஏற்பட்ட பற்றாக்குறையின்போதுதான் மக்கள் சிந்திக்க முற்பட்டனர். இதுவரை காலமும் நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை படிப்படியாக உணர ஆரம்பித்தனர்.

  அதன் வெளிப்பாடே 'அரகல' என்ற கலகக் காலக்கட்டம். அரசியல் வாதிகள் எம்மை ஆளப்பிறந்தவர்கள் அல்ல. அவர்ளை நமே உருவாக்குகறோம். என்ற உண்மையை உணரத் தொடங்கினர்.

original/img-20241018-wa0014
அதனைதொடர்ந்து ஜனாதிபதித் தேர்தலின் ஏற்பட்ட ஆட்சி மாற்றம்லும் அதற்கு வலுசேர்த்தது. இது அரசியல் கலாச்சார மாற்றத்தின் ஆரம்பம். இதன் அடுத்த கட்டம் எதிர் வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி இடம் பெறப் போகிறது. அன்றையதினத்துடன் மிகுதி நிலைமைகளும் மாறத் தொடங்கும். 

இப்படி பல கட்டங்களாக அது மாறி, புதிய கலாச்சாரத்தை உருவாக்கும் போதுதான் நாடு படிப்படியாக அபிவிருத்தி அடையும். அதன் பின் வெளிநாடுகளில் உள்ளவர்கள் படிப்படியாக உள்வர ஆரம்பிப்பர். பொருளாதாரம் வளரும், ஊழல்கள் நீங்கும். மக்கள் உள்ளத்தில் மனமாற்றங்கள் ஏற்படும், அதன் பின் இன,மத, சாதி, மொழி பேதமற்ற மக்கள் சமூகத்தை உருவாக்கும் நிலை ஏற்படும். 

இப்போது தேவைப்படுவது அரசியல் மாற்றம் ஒன்றல்ல, அரச மாற்றம் ஒன்றே தேவை. அதாவது எமது தேசம் மாறவேண்டும்.தேசத்து மக்களின் எதிர் பார்ப்புக்கள் மாவேண்டம். தற்போது எமது தேசம், தேசமாக இல்லை. எனவே தனிநபர்கள் தமது பொறுப்பை உணர்ந்தால் நாடு முன்னேரும். 

இலங்கையில் வாழும் சமூகக் குழுக்களுக்கிடையில் தேவைப்படுவது சம உரிமை அல்ல, சகலவற்றிலும் சம சந்தர்ப்பமே தேவைப்படுகிறது. இவற்றையெல்லாம் மேற்கொள்வதற்கு நாம் திட்டங்கள் வைத்துள்ளோம்.

சுமார் நூறு வருடங்களுக்கு முன் எவ்வாறு தேயிலைக் கொழுந்து பறித்தோமோ அதில் இன்று வரை எந்த மாற்றமுமில்லை. நூறு வருடங்களுக்கு முன் எப்படி தேங்காய் பறித்தோமோ அதே முறைதான் இன்றுவரை. விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அவையும் மாறவில்லை. அவற்றை மாற்ற நாம் தேசிய மட்டத்தில் மூன்று கொள்கைகளை அமுல் படுத்த உள்ளோம்.

 ஒன்று கைத் தொழில் கொள்கை, இரண்டாவது விவசாயக் கொள்கை, மூன்றாவது சேவைகள் தொடர்பாக கொள்கை (கல்விச் சேவை, சுகாதார சேவை, போக்குவரத்துச் சேவை போன்ற). இவை அடிக்கடி மாற்றப்படாது தேசிய இலக்கை நோக்கி செல்ல திட்டம் வகுத்துள்ளோம். அதற்கு என்.பீ.பி.யின் பாராளுமன்ற அதிகாரம் தேவைப்படுகிறது என்


றார்

VIDEOS

Recommended