வேட்பாளர் அறிமுகம் - மொஹமட் அசாத் சனூன் சாலி (ஆசாத் சாலி) -- கொழும்பு மாவட்டம்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Oct 25, 2024, 3:28:31 AM
வேட்பாளர் அறிமுகம் : மொஹமட் அசாத் சனூன் சாலி (ஆசாத் சாலி)
வேட்பாளர் - கொழும்பு மாவட்டம்
சின்னம் - சிலிண்டர்
இலக்கம் - 2
ஆசாத் சாலி என்ற பெயரை கேட்டால் இலங்கை அரசியலில் மிகவும் முக்கியமான பல வடிவங்களை கொண்டவராக பலராலும்; பார்க்க முடியும்.
1963 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் பிறந்த ஆசாத் சாலி கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்கவில் தமது கல்வியினை பெற்றுக் கொண்டார்.
தலைநகருக்கான சீர்த்திருத்த மற்றும் சமூக நோக்குகளை தனது பார்வையாக கொண்டு செயற்பட்டுவரும் ஆசாத் சாலி,வங்கியியல் மற்றும் பொருளாதார துறை துறை தொடர்பில் பரந்த அறிவினை கொண்ட ஒருவராக காணப்படுவத அவரது அரசியல் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக அமைகின்றது.
குறிப்பாக அவரது சிறப்பு துறையாக புலனாய்வு ஊடகத்துறை தொடர்பில் செயலாற்திறமை கொண்டமை சமூக சீர்த்திருத்த துறைக்குள் இலகுவாக நுழைந்து அதனை அடையாளம் கண்டு தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியுமாக அவருக்கு இருந்திருக்கின்றது.
இதனை மென்மேலும் வலுப்படுத்தும் வகையில் ஆசாத் சாலியின் அரசியல் பிரவேசம் வழி கொடுத்தது.கொழும்பு மாநகர சபையின் உறுப்பினராகவும் அதன் பிற்பாடு பிரதி மேயராகவும் அதனையடுத்த மெல் மாகாண சபையின் உறுப்பினராக மக்கள் பணி செய்த அவர் இறுதியில் மேல் மாகாணத்தின் ஆளுநராக பரிநமித்தார்.
தமது சமூக மற்றும் அரசியல் காலங்களில் தலை நகரினது மட்டுமல்லாமல் தேசிய ரீதியில் ஒடுக்கப்படும்,குரலற்ற மக்களுக்கு இனம்,மதம்,மொழி,பிரதேசம பாராமல் எந்த நேரத்திலும் துணிந்து சென்று மக்கள் பணி செய்வது அவரது ஆர்வமாக இருந்துவந்துள்ளது.
அவரது மக்கள் பணிகளில் குறிப்பிடக் கூடிய பல விடயங்களை பேசலாம்
கொழும்பில் குறைவருமானம் கொண்ட நடை பாதை வியாபாரிகளுக்கு மாற்று இடங்களை பெற்றுக் கொடுத்து அவர்களது வாழ்வாதார உரிமையினை பெற்றுக் கொடுத்தமை ,பின்தங்கிய கொழும்பு மாவட்ட தோட்டங்களில் வசிக்கும் மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளார்.
மேல் மாகாணத்தில் காணப்படும் பாடசாலைகளில் 60 பாடசாலையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு 201 மில்லியன் ரூபாய்களை பெற்றுக்கொடுத்து கல்வி சமூகத்திற்கான தமது பணியினை செய்தமை,சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆசாத் சாலி பவுண்டேசன் மூலம் தேவை நாடிய வறிய குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்களை வழங்கிவருகின்றமை இவற்றுடன் மட்டுமல்லாமல் மாவட்டம் கடந்து தேசிய ரீதியில் பல்வேறு பங்களிப்புக்களை செய்துள்ளார்.
இதிலும் குறிப்பாக ஆசாத் சாலி அவர்கள் மேல் மாகாண ஆளுநராக இருந்த போது,தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர்கள் நியமனங்களில் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மேல் மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டனர்.
இதன் போது அவர்கள் எதிர் கொண்ட பிரச்சினைகள் ஏராளம்,ஆளுநருக்குள்ள அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதி .கல்வி அமைச்சர்,மற்றும் திறைசேரி அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு சென்று உரிய மாகாணங்களுக்கு மேற்படி ஆசிpரியர்களின் நியமனங்களை மாற்றிக் கொடுத்து அவர்களது தீர்க்க முடியாத பிரச்சினைகளை தீர்த்தமையானது ஒரு வரலாற்று பதிவாகும்.
இது போன்று யாழ் நூலகத்தின் அபிவிருத்திக்கும் பார்வை குறைந்தவர்களுக்கு மூக்குக் கண்ணாடி நாடு தழுவிய முறையில் மருத்துவ முகாங்கள் நடத்தப்பட்டமை,ஆதரவற்ற வீடற்ற மக்களுக்கு பல வீடுகளை நிர்மாணித்து கொடுத்தமை உள்ளிட்ட அவரது பணிகளின் சிலவாகும்.
எப்போதும் மக்கள் அச்சமற்ற சூழலில் தமது வாழ்க்கையினை அமைதியாக கழிக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆழப் பார்வை கொண்ட அசாத் சாலி மதங்களை மதிக்கும் மனித நேயமிக்கவராக இருந்துள்ளார்.
ஆசாத் சாலியின் பேச்சுக்களின் வடிவங்களை பலர் வித்தியாசமாக பார்த்தாலும் எது பிழையோ அதனை முகத்திற்கு முன்னமே கூறும் ஒருவர்.
ஆரசியல்,சமூக,சமய விழுமியங்கள் தொடர்பில் அதிக அனுபவம் கொண்ட ஆசாத் சாலிமும்மொழி பாண்டியம் கொண்வர்.
இது போன்ற தகுதியுள்ளவர்கள் மக்கள் சபையில் மக்களுக்காக துணிந்து குரல் கொடுப்பார்கள் என்பதற்கு அவரது கல்வி,பொருளாதார சமூக விடயங்கள் உறுதுணையாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பாகும்.