• முகப்பு
  • இலங்கை
  • சகல அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஒன்று கூட்டுங்கள் ஜனாதிபதிக்கு ஆசாத் சாலி வேண்டுகோள்

சகல அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஒன்று கூட்டுங்கள் ஜனாதிபதிக்கு ஆசாத் சாலி வேண்டுகோள்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Oct 24, 2024, 10:52:46 AM

நாட்டில் மீண்டும் தாக்குதல் நடத்த அரசு இடம் கொடுக்க கூடாது என்று வேண்டியுள்ள முன்னாள் மேல் மாகாண ஆளுநரும்,புதிய ஜனநாயக முன்னணியின் ( சிலிண்டர்) கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ஆசாத் சாலி தற்போது வெடித்துள்ள இலங்கையில் ஈஸ்ரேலர்களின் நிலைப்பாடு தொடர்பில் சர்வகட்சி மாநாட்டினை கூட்டி தேவையான ஆலோசனைகளை பெறுவது மிகவும் அவசியம் என்று இதன் போது கூறினார்.

கொழும்பு 7 இல் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் கருத்துரைக்கையில் -

இதற்கு முன்னரான உயிர்த்த ஞாயிறு தொடர்பில எம்மால் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டதுடன் இதனுடன் தொடர்புபட இருந்தவர்கள் தொடர்பில் தகவல் வழங்கினோம்.

original/img-20241023-wa0131
ஆனால் அப்போதைய அரசும்,பாதுகாப்பு தரப்பும் அசமந்த போக்கில் செயற்பட்டனர்,எமது முறைப்பாடுகளுக்கு பின்னர் இந்திய புலனாய்வு துறையினரும் இதனை இலங்கை அரசுக்கு எச்சரித்திருந்தனர்.

அதுவும் கிடப்பில் போடப்பட்டதாகவும்,பயங்கரவாதிகளை கைது செய்வதற்கு பதிலாக தகவல் கொடுத்த எம்மை கைது செய்து சிறைப்படுத்தும் பணியினையே அவர்கள் செய்தனர்.

இம்முறையும் இந்தியா வழங்கிய புலனாய்வு தகவலின் அடிப்படையில் தற்போது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.கொழும்பில் சில பகுதிகளில் கடும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.தொடர்மாடியில் இருக்கும் மக்கள் கூட பாதுகாப்பு வழங்கப்பட்ட பகுதிகளை பார்த்தால் அச்சம் அடைகின்றனர்.

இலங்கையின் சுற்றுலா பிரதேசமான அருகம்பையிலும் இந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.அருகம்பையில் புதிதாக எவ்வாறு ஈஸ்ரவேலர்களின் நிiலையம் அமைக்கப்பட்டது அருகில் இஸ்லாமியர்களின் வணக்கஸ்தலம் காணப்படுகின்றது.ஈஸ்ரேலர்களின் ஊடுருவல் என்பது எமது நாட்டுக்கு அச்சுறுத்தல் என்பதை அரசாங்கம் மறந்து செயற்பட முடியாது.

original/whatsapp-image-2024-10-22-at-09
இதன் போது கேள்;வியினை எழுப்பிய செய்தியாளர் ஒருவருக்கு ஆசாத் சாலி பின்வரும் பதிலினை வழங்கினார்.

பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவே அநுர குமார திசாநாயக்க குரல் கொடுத்துவந்துள்ளார்.ஆனால் அண்மையில் 105 நாடுகள் இஸ்ரேலுக்கு எதிரான குற்றச்சாட்டில் கைச்சாத்திட்ட போது,இலங்கை அதில் கைச்சாத்திடவில்லை.

இது தொடர்பில் பகிரங்கமாக நான் ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பினேன்.அதன் பின்னர் பின்னர் கையொப்பமிட்டதாக அரச தரப்பில் கையொப்பமிட்டதாக தெரிவிக்கப்பட்டது.அவ்வாறு கையொப்பமிட்ட அவணத்தை ஏன் இதுவரைக்கும் வெளியிடவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

அப்படியென்றால் முழு அரபு நாடுகளுக்கும் உண்மையினை மறைக்கும் வேலையினை அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி செய்கின்றாரா,அது வெறும் கண் துடைப்பா என கேட்கவிரும்புகின்றேன்.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த அச்ச நிலையினை தொடர் வைக்காமல் அனைத்த கட்சிகளின் தலைவர்களை அழைத்து ஏற்பட்டுள்ள நிலை தொடர்பில் விரிவாக ஆராய்ந்து எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு செயற்பாடுளை கட்சி செயற்படுகளுக்கு அப்பால் முன்னெடுக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள்விடுக்கின்றேன்.

அதே வேளை பாராளுமன்ற தேர்தல் தொடர்பிலும் கருத்துரைத்தார்.

துற்போதைய ஜனாதிபதி முழு அதிகாரத்தையும் தமக்கு தருமாறு கேட்கின்றார்.நாட்டு மக்கள் அவருக்கு ஜனாதிபதி என்ற பதவியினை கொடுத்திருக்கின்றார்கள்.இதனை கொண்டு எதனை செய்ய முடியுமோ அதனை செய்யட்டும்,தேர்தல் மேடையில் அவர் வழங்கிய வாக்குறுதிகளை நினைவுபடுத்திபார்க்கட்டும்,ர அதிகாரிகளின் சம்பளத்தை 6 மாதங்களுக்கு ஒரு அதிகரிப்பதாக கூறினார்.இது சாத்தியமாகுமா ?இதனையும் நம்பி தானே வாக்களித்தார்கள்.

original/img-20241018-wa0014

ஆனால் வங்குரோத்து நிலையில் இருந்த நாட்டை குறுகிய காலத்துக்குள் விடுவித்து கொடுத்தவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள்,இருந்தும் இன்னும் நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதாக தற்போதைய அரசு கூறுகின்றது.ஆனால் சர்வதேசம் இதனை ஏற்கவில்லை நாடு கடந்த 2 வருடங்களுக்கு அந்த நிலையில் இருந்து விடுபட்டுவிட்டது என்றே அவர்கள் கூறுகின்றனர் என்று முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி கூறினார்.

 

VIDEOS

Recommended