• முகப்பு
  • இலங்கை
  • 85வது ஆண்டு நிறைவு காணும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாளை கொழும்பிலும், மலையகத்திலும் விசேட பூஜைகள்

85வது ஆண்டு நிறைவு காணும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாளை கொழும்பிலும், மலையகத்திலும் விசேட பூஜைகள்

தேவதாஸ் சவரிமுத்து

UPDATED: Jul 23, 2024, 9:12:39 AM

முழு மலையக மக்களின் ஏகோபித்த ஆதரவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுள்ளபடியால் 85 ஆண்டுகளை கடந்து ஒரு வரலாற்றை பார்க்க முடிகிறது. பல்வேறு விமர்சனங்களும் இருட்டடிப்புக்களுக்கும் மத்தியில் மலையக மக்களை இதுவரை காலமும் கட்டிக்காத்து சரியான ஒரு தலைமைத்துவத்தை கொடுத்து தெளிவான சிந்தனையோடு வழிநடத்தி வந்ததென்றால் அது இலங்கைதொழிலாளர் காங்கிரஸின் தொழிலாளர் வர்க்க சிந்தனையும்ரூபவ் அர்ப்பணிப்புமே காரணம்.


85வது ஆண்டு நிறைவு காணும் நாளை (25.7.2024) இ.தொ.கா தலைமையகமான சௌமிய பவனில் விசேட பூஜை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அதன் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது - மலையக மக்கள் அனுபவித்து வரும் உரிமைகளும், சலுகைகளும் இ.தொ.கா அர்ப்பணிப்போடு மேற்கொண்ட போராட்டங்களாலும் அணுகுமுறைகளினாலும் கிடைத்தவை என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்களும் இருக்கமுடியாது.

இத்தகைய சேவைகளையும் புரிந்துள்ள சாதனைகளையும் அரசியல் சாணக்கியம்ஆகியவற்றை இன்று இளைஞர்களும் மற்றும் புத்திஜீவிகளும்,பொதுமக்களும் நன்கு உணர்ந்து இ.தொ.காவின் பின்னால் அணிதிரண்டு வர ஆரம்பித்து விட்டார்கள்.

கடந்த காலங்களிலே இ.தொ.கா எடுத்த முடிவுகள் அனைத்தும் மக்களின் நலனுக்கு எதிராக அமைந்ததில்லை. தோட்டப்புற மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள், பொருளாதார நெருக்கடிகள் ஆகியவற்றை அரசுடன் இணைந்து பரிகாரம் தேடியது. தேடியும் வருகிறது.

அத்துடன் இதுவரை காலமும் எவரையும் உதாசீனம் செய்ததில்லை. அனைவரையும் ஒருங்கே இணைத்து மலையக கட்டுக்கோப்பைஅன்றுமுதல் இன்றுவரை கட்டிக்காத்தே வந்திருக்கின்றது.

இந்த நல்ல நாளில் இ.தொ.கா ஸ்தாபக தலைவர் அமரர் சௌமியமுர்த்தி தொண்டமான் ஐயா,இ.தொ.கா முன்னால் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஐயா ஆகியோரின் பெரும் சேவைகளை இந்த 85வது வருட நிறைவாண்டில் நினைவு கூருகின்றோம்.

இதனையிட்டு கொழும்பு இ.தொ.கா தலைமையகமான சௌமியபவனில் விசேட பூஜையும்ரூபவ் நடைபெறஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதனோடு மலையகமெங்கும் அன்றைய தினம் தோட்டஆலயங்களிலும் மற்றும் எமது கிளைக்காரியாலயங்களிலும் பூஜைகள் நடைபெறவுள்ளன.85வது ஆண்டு நிறைவை நினைவு கூரும் இத்தருணத்தில் அனைவருடன் இணைந்து நாமும் வாழ்த்துகின்றோம் பிரார்த்திக்கின்றோம்.

- தேவதாஸ் சவரிமுத்து

சிரேஷ்ட ஊடக இணைப்பாளர் 

 

VIDEOS

Recommended