• முகப்பு
  • இலங்கை
  • புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்தும் முன்னாள் ஜனாதிபதிக்கு நன்றியும் தெரிவிப்பு

புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்தும் முன்னாள் ஜனாதிபதிக்கு நன்றியும் தெரிவிப்பு

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Sep 23, 2024, 4:24:04 AM

ரணில் விக்ரமசிங்க.......

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்த மலையக மக்களுக்கு செந்தில் தொண்டமான் நன்றி!

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் வேண்டுகோளை ஏற்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்த மலையக மக்களுக்கு, முன்னின்று செயற்பட்ட இ.தொ.காவின் தொண்டர்களுக்கும் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இ.தொ.க இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகள் தொடரும்.

ஜனாதிபதி தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு இ.தொ.கா பொறுப்பு என்றும் எதிர்காலத்தில் அதை நிறைவேற்றும் என்றும்,

இ.தொ.கா தொடர்ந்தும் மக்களுக்காக முன்னின்று செயற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அனுரவுக்கு.......

ஜனாதிபதி அனுரகுமார    திஸாநாயக்கவுக்கு, இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து!

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த 5 வருட காலப்பகுதியில் நாட்டை மென்மேலும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதோடு, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

 

VIDEOS

Recommended