• முகப்பு
  • இலங்கை
  • பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனிய மக்கள் பாரிய அரச பயங்கரவாதத்தை எதிர்கொண்டுள்ளனர்- சஜித் காட்டம்

பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனிய மக்கள் பாரிய அரச பயங்கரவாதத்தை எதிர்கொண்டுள்ளனர்- சஜித் காட்டம்

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: May 15, 2024, 12:37:35 PM

International News Today 

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன யுத்தம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (14) பாராளுமன்றத்தில் ஆற்றிய முழு உரை.

“பாராளுமன்றத்தில் இன்று மிக முக்கியமான விவாதமாகும், பாலஸ்தீன மக்களின் உரிமைக்கான பிரேரணையை ரவூப் ஹக்கீம் அவர்கள் முன்மொழிந்து இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் அவர்கள் வழிமொழிந்து விவாதிக்கப்படும் இந்தத் தருணத்தில் கூட இந்த அவலத்தில், ஆயிரக்கணக்கான, பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனிய மக்கள் பாரிய அரச பயங்கரவாதத்தை எதிர்கொண்டுள்ளனர்.

வரலாற்றைப் பார்க்கும் போது, கொலைகாரன் ஹிட்லர் யூதர்களை கேஸ் சேம்பர்களுக்கு அனுப்பி வதை முகாம்களை உருவாக்கி கொடூரமாகக் கொன்றான் என்பதும், அப்போது யூதர்கள் மீது ஹிட்லர் தொடுத்த அதே பயங்கரம், தற்போது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் கொலை, அரச பயங்கரவாதம் பாலஸ்தீன மக்கள் மீதான இந்த வெறுக்கத்தக்க மற்றும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்.

International News

இந்த சபையில் நாம் அனைவரும் பாகுபாடின்றி வன்மையாகக் கண்டிப்பது மட்டுமன்றி, உலக சமூகத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் நாங்கள் தீவிரமாக அறிவிக்கிறோம், இந்த அரச பயங்கரவாதத்தையும் இந்த படுகொலையையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.

இதைத் தடுக்க நாம் எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து தங்களால் இயன்ற அதிகபட்ச ஆதரவை நிபந்தனையின்றி வழங்க வேண்டும் என்பதை இந்நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

48 முதல் 56 வரை சூயஸ் போர், 67 இல் 6 நாள் போர், 73 இல் யொன்கிப்பர் போர், 78-79 தொடக்கம் தொடர்ச்சியான இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் சூழ்நிலைகளில் மிகப்பெரிய கவலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வரலாற்றில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இஸ்ரேல் மற்றும் பிற அரபு நாடுகளில் உள்ள பல தலைவர்கள் தங்களது முன்னாள் தீவிரவாத நிலைகளில் இருந்து நடுநிலைக்கு மாறினர்.

International News and Updates

நினைவுக்கு வருகிறது ஜிம்மி கார்ட்டர் அதிபராக இருந்தபோது இஸ்ரேல் பிரதமராக இருந்த தீவிரவாத போக்குக் கொண்ட menachem begin, மறுபுறம் anwar sadath தீவிர நிலைகளை விட்டு விலகி நடு நிலைக்கு வந்தார்கள். ஓஸ்லோ இணக்கப்பேச்சு, ஆப்ராம் இணக்கப்பேச்சி என பல இணக்கப்பேச்சுகள் மூலம் பல முயற்சிகளை மேற்கொண்டு நிலையான தீர்வை வழங்குவதற்கு முயற்சிகளை எடுத்தனர் என்பதை நினைவு கூர்கிறோம்.

சகோதரத்துவம், ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நட்புடன் கூடிய two state solution இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளின் தீர்வை நாங்கள் எப்போதும் எதிர்பார்க்கின்றோம். இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த Yitzhak Rabin எனக்கு நினைவிருக்கிறது. அவரும் தீவிரவாத போக்கில் இருந்த ஒருவர். ஆனால் அவர் Yasser Arafat துடன் ஒரு நடுநிலையை அடைந்து ஒரு சமரசத்தில் கையெழுத்திட்டார். ஆனால் நடுநிலைக்கு வந்த Yitzhak Rabin மற்றும் Yasser Arafat ஆகியோர் கொல்லப்பட்டனர்.

உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகள் இரு நாடுகளின் தீர்வு என்ற நிலைப்பாட்டில் இருக்கும்போது, இரண்டு நாடுகளில் ஒன்று ஒரு நாட்டை அல்லது மற்றொன்றை அழித்துவிடுகின்றது. தற்போதைய இஸ்ரேலிய அரசாங்கம் பாலஸ்தீன மக்களின் பாலஸ்தீன நிலத்தை ஆக்கிரமிப்பு செய்கின்றனர். புதிய குடியேற்றங்கள் உருவாகின்றன. காஸா பகுதியில் இன்று நடப்பது இனப்படுகொலை. ஆனால் அந்த மண்ணில் இருக்க வேண்டிய மக்கள் அழிக்கப்பட்டுள்ளனர்.

Online International News and Updates

சர்வதேச சட்டத்தின்படி, ஒரு நாட்டிற்கு பிரதான நிபந்தனைகள் சில உள்ளன. ஒன்று நிலம், மற்றொன்று மக்கள் இதில் மக்களை அழிக்கின்றனர். மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகள் குண்டுகளால் தாக்கப்படுகின்றன. பெஞ்சமின் நெதன்யாகுவின் இஸ்ரேலிய அரசு நடத்தும் இனப்படுகொலை மற்றும் அரச பயங்கரவாதத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அனைவரும் நடு நிலைக்கு வந்து இதற்கான தீர்வை வழங்க வேண்டும். அதற்காக அந்த இடத்தை கொடுத்தோம். ஆனால், அந்த தீவிரவாத நிலையிலிருந்து யூதர்களுக்கு ஹிட்லர் செய்த இனப்படுகொலையைத்தான் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட தற்போதைய அரசு செய்தது வருகின்றது. இது பாரிய அவலம். இந்த அரச பயங்கரவாதம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதுதான் எங்களின் நிலைப்பாடு.

நானும் கொஞ்ச காலம் அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்தேன். அமெரிக்க சமூகத்தின் அணுகுமுறை மாறிவிட்டது. அப்போது இஸ்ரேலுக்கு எதிராக பலத்த எதிர்ப்பு இல்லை. ஆனால் இஸ்ரேல் மீதும் இங்கிலாந்து மீதும் அனுதாபம் கொண்ட அமெரிக்க சமூகம் பாலஸ்தீனத்தை முற்றாக அழிக்க மேற்கத்திய நாடுகளில் இஸ்ரேல் மேற்கொண்ட முயற்சிகளை மொத்த அழிவுக்கு உட்படுத்தி, பல நூற்றாண்டுகள் எழுச்சி பெற முடியாத வகையில் இந்த மாபெரும் அழிவை நிகழ்த்தியது. இன்று அமெரிக்க சமூகம் பாலஸ்தீன சமூகத்தின் பக்கம் உள்ளது. இது பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் உள்ளது பொது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இஸ்ரேலின் அரசால் நடைமுறைப்படுத்தப்படும் கொலைக் கொள்கை நிறுத்தப்பட வேண்டும்.

Latest International News

உலகின் மேற்கத்திய நாடுகளின் மக்கள் எப்பொழுது இவ்வாறு வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இஸ்ரேலுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் உடனடியாக நிறுத்தவும் அந்நிறுவனங்கள் புறக்கணிக்கப்படும் என்றார்கள். இது சமீப காலத்தில் நடந்ததே இல்லை. பாலஸ்தீன மக்களை ஆவியாக்க இஸ்ரேல் முயற்சிக்கிறது.

தீவிரவாதமோ, பயங்கரவாதமோ இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. இஸ்ரேல் நடைமுறைப்படுத்தும் அரசை மையமாகக் கொண்ட பயங்கரவாதம் மனிதாபிமானமற்ற தாக்குதல் குழந்தைகள், பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த பாலஸ்தீன சமூகத்தையும் அழிக்கும் முயற்சியாகும். இந்த இராணுவ முயற்சியை வன்மையாக கண்டிக்கிறோம். இந்தப் படுகொலையை நாம் பார்வையாளர்களாகப் பார்க்கிறோமா? அது இல்லாமல், நிலையான அமைதிக்கான நடைமுறையில் நமது பங்கு தீவிரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.

மற்ற நாடுகளின் தலைவர்களின் பெயர்களை நான் குறிப்பிடவில்லை. நாம் அமைதிக்கு இடமளிக்க வேண்டும். இந்தப் படுகொலைக்கு பிரதமர் நெதன்யாகுதான் காரணம் என்பதை நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். உங்கள் சகோதரர் பிரதமர் Yitzhak Rabin அவர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று பிரதமர் நெதன்யாகுவிடம் கூறுகிறேன். அன்வர் சதாத் மற்றும் யாசர் அரபாத்திடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்.

Today International News In Tamil

இனப்படுகொலை கொள்கையால் பிரதேசத்தில் வாழும் மக்களை முற்றாக கொன்று குவித்து நீங்கள், தனியான பாலஸ்தீன நாட்டை உருவாக்கப் போகின்றீர்கள். ஹிட்லரின் ஆட்சியில் யூதர்கள் கொடூரமாக அழிக்கப்பட்டனர். அதில், யூத மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் நம்பினோம். ஆனால் பிரதமர் நெதன்யாகுவின் கொலைக் கொள்கையில், ஹிட்லரின் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதச் செயல்களால் பாதிக்கப்பட்ட யூத மக்களுக்காகச் செய்கின்ற படுகேவலமான கொள்கையை நடைமுறைப்படுத்துகின்றீர்கள்.

நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரின் ஏகோபித்த தீர்மானமாக இந்தப் படுகொலையை நிறுத்துமாறு பிரதமர் நெதன்யாகுவிடம் கோரிக்கை விடுக்க வேண்டும். அரசு பயங்கரவாதம், ஒட்டுமொத்த பாலஸ்தீன சமூகத்தின் அழிவை உடனடியாக நிறுத்துங்கள்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் பெற்றுள்ள நாடுகளுக்கு பொறுப்பு உள்ளது. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பெயரில் அவற்றைப் பின்பற்றுவதாயின் அனைத்து உரிம நாடுகளுக்கும் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. இந்த பாரிய இனப்படுகொலையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுங்கள். அத்தகைய நடவடிக்கை எடுக்க உங்களுக்கு வலிமை இருக்க வேண்டும்.

International News

இதை உலக வல்லரசின் நாடகமாக மாற்றாமல், உலகத்தின் கண் முன்னே மருத்துவமனைகள் குண்டுவீசித் தகர்க்கப்படுவதையும், பாடசாலைகள் மீது குண்டுகள் வீசப்படுவதையும் உலகம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? நாம் அமைதியாக இருக்க முடியுமா?

ஹக்கீம் அவர்கள் முன்மொழிந்த மற்றும் இம்தியாஸ் அவர்களால் வழிமொழிந்த பிரேரணையை மனதார அங்கீகரித்து சமாதானத்திற்கு இடம் கொடுங்கள். இரு நாடுகளும் நல்லிணக்கத்துடனும் ஒத்துழைப்போடும் வாழக்கூடிய நிலையை அழிக்க வேண்டாம்.

Two state solution இஸ்ரேல் நிராகரித்தது. இந்தTwo state solution உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று, பாதுகாப்பு கவுன்சிலால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. பாதுகாப்பு கவுன்சில் இதை நிராகரித்தால், இந்த இனப்படுகொலையை நிறுத்த மாற்று திட்டத்தை உலக நாடுகள் செயல்படுத்த வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு குடிநீர் இல்லை, உணவு இல்லை, மருத்துவ வசதி இல்லை, தங்க இடம் இல்லை. கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன, இந்த இனப்படுகொலையை நிறுத்துவதற்கு தேசிய, மத, அரசியல் கட்சிகளைப் பொருட்படுத்தாமல் இலங்கை சமூகம் ஒன்று திரளுவோம்’’

VIDEOS

Recommended