• முகப்பு
  • இலங்கை
  • பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்குவதாக கூறிய பணத்தை கொடுத்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது ரஞ்சன் ராமநாயக்க தொடரில் தமிதா கருத்து

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்குவதாக கூறிய பணத்தை கொடுத்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது ரஞ்சன் ராமநாயக்க தொடரில் தமிதா கருத்து

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Oct 28, 2024, 6:25:19 PM

பல்கலைக்கழக மாணவர்களை மீண்டும் போராட்டக் களத்துக்கு கொண்டு செல்வதற்கு ரஞ்சன் ராமநாயக்க முயற்சிக்க வேண்டாம் என ஜனநாயக தேசிய கூட்டணியின் மகளிர் அமைப்பாளரும் பிரபல நடிகையுமான தமிதா அபேரத்ன தெரிவித்தார்.

 கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.

ரஞ்சன் ராமநாயக்க தலைமை தாங்கும் கட்சியின் மாநாட்டுக்கு பணம் கொடுத்து பல்கலைக்கழக மாணவர்களை அழைத்த போதும் அது உரிய முறையில் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்று ஊடகங்கள் மூலம் வெளிவந்த செய்தி தொடர்பில் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கயிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

original/img-20241022-wa0078
மேலும் இந்த செய்தியாளர் சந்திப்பில் தமிதா அபயரத்ன கருத்துரைக்கும் போது -

 பல்கலைக்கழக கல்வியினை தொடர்வதற்கு மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர் கொள்ளுகிறார்கள். அவர்களது பெற்றோர்கள் கூலித் தொழில்களில் ஈடுபட்டு அவர்களை கற்பதற்காகவே பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.

 கடந்த காலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். இதனால் இவர்களது கல்வி செயற்பாடுகள் மிகவும் மந்தகதியில் இடம் பெற்றத்தை க நாம் ஊடகம் மூலம் காண முடிந்தது.

 தினந்தோறும் வீதியில் அவர்கள் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

original/img-20241018-wa0351
ஆனால் இன்று அவ்வாறான ஒரு ஆர்ப்பாட்டங்களை காண முடியாது. ஏனெனில் ஆர்ப்பாட்டங்களை செய்தவர்களே இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள்கள்.

 இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்களது கல்விக்குள் அல்லது பல்கலைக்கழகத்திற்குள் அரசியல் செயல்பாடுகளை தயவு செய்து எவரும் கொண்டு செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கின்றேன்.

 கூட்டங்களுக்கு ஆட்களை அழைத்து வருவதில் எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை ஆனால் நீங்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொடுப்பதாக கூறிய அந்த பணத்தை கொடுத்து இருந்தால் இவ்வாறான ஒரு விஷயம் வெளியே வந்திருக்காது.

வறுமை நிலையிலேயே மாணவர்கள் கல்வியை கற்கிறார்கள். எனவே அவர்களுக்கு கிடைக்கின்ற இந்த பணமானது அவர்களுடைய கல்வி மற்றும் உணவு வசதிகளுக்கு உண்மையில் அன்றைய செலவுக்கு கைகொடுக்கும்.

 எனவே நீங்கள் அவர்களுக்கு இவ்வாறான ஒரு துரோகத்தை செய்யாமல் நீங்கள் பேசியதை அவர்களுக்கு கொடுத்து இந்த பிரச்சி னைக்கு முடிவை காணுங்கள்.

 ஹேஷா விதாரணவுக்கு ஒரு விடயத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன் இரத்தினபுரியில் மட்டுமே அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளராக செயல்படலாம் ஆனால் நாம் அவ்வாரள்ள, நாட்டின் 22 மாவட்டங்களிலும் எமது ஜனநாயக தேசிய முன்னணி போட்டியிடுகின்றது.

அப்படியெனில் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று நாம் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றேன் எனவே என்னுடைய பெருமதியும் ஹேஷாவின் பெருமதியும் வித்தியாசமானது.

 எனவே தனிப்பட்ட ரீதியில் தனக்கு எதிரான கருத்துக்களை முகப்புத்தகங்களில் வெளியிடுவதற்கு பலர் குறிப்பிடுகின்ற கருத்துக்கள் தொடர்பில் அவர் மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டும் என வேண்டுகோள் முன் வைக்க விரும்புகிறேன்.

 சஜித் பிரேமதாசா உங்களுக்கு தொலைபேசி மூலம் உங்களுக்கு அழைப்பு கொடுத்தாரா என கேள்வியை ஊடகவியாலாளர் கேள்வியினை முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்த தமிதா அபயாரத்ன -

original/1729482825709
சஜித் பிரேமதாசா எனக்கு தொலைபேசி அழைப்பு விடுக்கவில்லை ஆனால் வேறு படாத தொலைபேசி அழைப்பு கொடுத்தார்கள் குறிப்பாக கட்சியின் செயலாளர் நாயகத்திற்கு நான் பல எஸ்எம்எஸ் அனுப்பி இருக்கின்றேன் தொலைபேசி எழும் முயற்சித்த ஆனால் இதுவரைக்கும் அவர் என்னுடைய தொலைபேசிக்கு பதிலளிக்காமல் இருக்கிறார்.

 வயதைப் பொருத்தவரையில் நான் அவரது ஒரு மகள் போன்றவள் ஏன் எனக்கு இவ்வாறு ஒரு அநியாயம் அவர்களால் ஒழிக்கப்பட்டது என்பது தொடர்பில் தேடிப் பார்க்கின்றேன். எனக்கு மட்டுமல்ல இன்னும் பலருக்கும் இவ்வாறான கழுத்தறுப்புகள் இடம்பெற்று இருப்பதாக அறிய முடிகிறது.

என்றும் இந்த ஊடாகவியலாளர் சந்திப்பின் போது அவர் கூறினார்.




VIDEOS

Recommended