ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமியின் 70 வது வருட தேசிய மாநாடு எதிர்வரும் 29 சனிக்கிழமை BMICH இல்
அஷ்ரப். ஏ. சமத்
UPDATED: Jun 27, 2024, 5:46:31 PM
ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமியின் 70 வது வருட தேசிய மாநாடு எதிர்வரும் 29 சனிக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பி.ப.04.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் 1600 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளதாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உதவிச் செயலாளர் எம்.எச்.எம். ஹசன் மற்றும் நிறைவேற்று அதிகாரி அப்துல் ரஹ்மான் ஆகியோர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி 1954 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவ் இயக்கம் இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையே தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் மறுமலர்ச்சி நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது.
இயக்கம் இலங்கையில் முஸ்லிம்கள் சார்பாக இலங்கையில் அடிக்கடி ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் பல்வேறு சமூக அனர்த்தங்களுக்கு உடனடி உதவிகளையும். இரத்த தானம் , சிரமதானங்கள் . வாழ்வாதார உதவிகள் போன்ற பல சமூக சேவை செயற்பாடுகள் என்பன்வற்றினை சகல சமூகங்களுக்கும் பெற்றுக்கொடுக்கும் வகையில் செயற்ப்பட்டு வந்துள்ளது.
அல்ஹஸனாத், எங்கள் தேசம் அஹ்ரம் தமிழ் சிங்கள மொழி மூலம் பிரபோதைய போன்ற சமூக அரசியல் இஸ்லாமிய வாராந்த பத்திரிகைகள், மாதாந்த இதழ்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்துள்ளது.அத்துடன் அல்குர்ஆன் சிங்கள மொழி மூலமும் வெளியீடும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமிய தலைவர் அஷ்ஷேக் எம்.எச்.எம். உசையிர் இஸ்லாகி, தலைமையில் வைபவம் நடைபெறும். அத்துடன் தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரனி பாயிஸ் முஸ்தபா, சர்வதோய தலைவர் டொக்டர் வின்னி ஆரியரத்தின, கலாநிதி ஜெஹான் பெரேரா, பேராசிரியர் சுமதி சிவமோகன், வல்பொல ராகுல நிறுவனத்தின் தலைவர் கல்கிந்த தர்மானந்த தேரோ, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயலாளர் அஷ்ஷேக் அர்க்கம் நூர் ஆமித், மௌலவியா நஜிமுன் நிசா ஆகியோர்களும் உரையாற்றுவார்கள்.
அத்துடன் சர்வதோய இயக்கத்துடன் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்படும். 70 ஆண்டை முன்னிட்டு ஆண்டு இதழ் ஒன்றும் வெளியிடப்படும் என உதவிச் செயலாளர் ஹசன் தெரிவித்தார்.