புத்தளம் திறந்த பல்கலைக்கழக வளாகத்தை வலுவூட்டுவதன் அவசியம்பற்றிய விஷேட கலந்துரையாடல்
பாரூக் பதீன்
UPDATED: Dec 6, 2024, 5:43:43 PM
நாம் புத்தளம் திறந்த பல்கலைக் கழக வளாகத்தினை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதாயின் எமது பணி எவ்வாறு அமைய வேண்டும்.
திறந்த பல்கலைக்கழகத்துக்குரிய பெளதிக வளங்களைப் பெற்றுக்கொள்வதாயின் நாம் எவ்வாறு செயற்பட வேண்டும்.
இங்கு நடைபெறும் பாடநெறிகளின் முக்கியத்துவம் பற்றி உரிய மாணவர்களுக்கு விளிப்புனர்வூட்ட தகவல் ஊடகங்களின் வகிபாகம் எவ்வாறான முறைகளில் அமைய வேண்டும்.
புதிய நிரந்தர வகுப்பறைக்கட்டிடங்களைப் பெறுவதாயின் எவ்வாறான அனுகுமுறைகளின் கீழ் திட்டவரைபுகளை எழுதினால் அரச மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் பங்களிப்புக்களைப் பெறமுடியும்.
புத்தளம் மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தியில் திறந்த பல்கலைக்கழகத்தின் தேவையும் வள ஒதுக்கீடுகள் பற்றி 2025ஆம் ஆண்டு பாராளுமன்ற பாதீடு (பஜட்டில் ) யாரூடாக எவ்வாறான முறைகளைக்கையாண்டு சமர்ப்பித்தல் சிறந்தது.
என்பனபற்றிய விரிவான கலந்துரையாடல் புத்தளம் முஸ்லிம் கலாசார மண்டபத்தில் 2024.12.06ஆம் திகதி நடைபெற்ற போது Zahirians-92 கலாநிதி SRM.ஸராபதுல்லாஹ் மற்றும் பாரூக் பதீன் ஆசிரியராகிய நானும் கலந்து கொண்டு ஆரோக்கியமான மேற்படி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம்.
ஏனையோரும் எமது கருத்துக்களை வரவேற்று தமது கருத்துக்களையும் முன்வைத்தனர். பின்னர் இச்செயற்பாடுகளை முன்னெடுக்க குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
இக்கலந்துரையாடலில் கலாநிதி SRM.ஸராபதுல்லாஹ் அவர்களின் வகிபாகம் சிறப்பாக இருந்தமை விஷேட அம்சமாகும்.