• முகப்பு
  • இலங்கை
  • சிறை செல்வேண்டிய சிலர் இன்று பாராளுமன்றம் செல்ல முயற்சிக்கின்றனர் - வீ. ஆனந்த சங்கரி தெரிவிப்பு

சிறை செல்வேண்டிய சிலர் இன்று பாராளுமன்றம் செல்ல முயற்சிக்கின்றனர் - வீ. ஆனந்த சங்கரி தெரிவிப்பு

ஜே.எம்.ஹாபீஸ்

UPDATED: Nov 3, 2024, 7:19:41 AM

சிறை செல்வேண்டிய சிலர்இன்று பாராளுமன்றம் செல்ல முயற்சிக்கின்றனர். முன்னைய காலத்து அரசியல் இன்றில்லை என தமிழர் விடுதலை முன்னணியின் பொதுச் செயலளரும் முன்னாள் கிளி நொச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான வீ. ஆனந்த சங்கரி தெரிவித்தார். 

கண்டியில்இடம் பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

'மலையக அரசியல்அரங்கம்' என்ற அமைப்பு இதனை கண்டி இந்து கலாச்சார மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தது. அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது-

original/1729482825709_copy_432x432
நான் இப்போது 90 வயதையும் தாண்டி விட்டேன்.

இந்த வயதிலுமா அரசியல் செய்ய வேண்டும் எனப் பலர் கேட்கின்றனர். இன்று பாராளுமன்ற ஜனநாயகம் குன்றி விட்டது. முன்பிருந்த அரசியல் இன்றில்லை. சிறையில் இருக்க வேண்டிய சிலர் இன்று பாராளுமன்றம் செல்ல முயற்சிக்கின்றனர்.

இப்படியானவர்களுக்கு எம்போன்றவர்கள் பாராளுமன்ற ஜனநாயகம் எத்தகையது எனக் காட்டிக் கொடுக்க நாம் அரசியல் செய்ய வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார். 

தொழிற் சங்க வாதியான வீ.கே. வௌ்ளையனின் 106 வது ஜனனதினம் தொடர்பாக இடம் பெற்ற இவ் வைபவத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீ. ஆனந்த சங்கரிக்கு வீ.கே. வௌ்ளையன் ஞாபகார்த்த விருது வழங்கப்பட்டது.

original/1730272094060_copy_432x432
கண்டி மாவட்ட சர்வமத மைப்பின்செயலாளர் காமினி ஜயவீர மற்றும் தேசிய கல்வி நிறுவக வளவாளரும் ஓய்வு பெற்ற சிரேஷ்ட்ட போதனாசிரியருமான ஜே.எம்.ஹாபீஸ் ஆகியோர் இணைந்து அதனை அதனைக் கையளித்தனர். 

முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் அவர்கள் நினைவுப் புத்தகம் ஒன்றையும் கையளித்தார்.

 

VIDEOS

Recommended