• முகப்பு
  • இலங்கை
  • பிறைக்குழுவை முன்னிறுத்தி சமூக ஒற்றுமையை சீரழிக்க சில சக்திகள் முயற்சிக்கிறது

பிறைக்குழுவை முன்னிறுத்தி சமூக ஒற்றுமையை சீரழிக்க சில சக்திகள் முயற்சிக்கிறது

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Apr 16, 2024, 1:30:57 PM

புனித நோன்புப்பெருநாளை கொண்டாடும் விதமாக ஸஹபான் மாத தலைபிறை பார்க்கும் நிகழ்வில் தீர்மானம் எடுப்பதில் இருந்த காலதாமதத்தை வைத்து முஸ்லிம் சமூகத்தினரை மீண்டும் பிளவுபடுத்தும் ஒப்பந்தச் சித்தாந்தங்களை விதைக்கும் ஒப்பந்தச் சிந்தனையாளர்களின் முயற்சிகளை மார்க்க, அரசியல் மற்றும் சிவில் தலைவர்கள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கொழும்பு பெரிய பள்ளிவாசலை முன்னிறுத்தி பிறை பார்க்கும் பணியை எமது முன்னோர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அதில் இஸ்லாமிய மாத சுட்டெண்னையும் மாதாந்தம் அவர்கள் கணித்து வருகிறார்கள். கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறை குழுவில் தற்போது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் அரசாங்கத்தின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அதன் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உறுதியான மற்றும் நம்பகமான தீர்மானங்களை எடுப்பதில் உள்ள சில காலதாமதங்களை முன்வைத்து சில ஒப்பந்தச் சிந்தனையாளர்கள் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை சிதைத்து பிராந்திய மற்றும் பூகோள அரசியல் சதிகளை செய்ய முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சில நாட்களாக சமூக ஊடகங்களில் கிழக்கு மாகாணத்தில் தனியாக பிறை பார்க்கும் குழு அமைக்கப்பட வேண்டும் என்று சிலர் பகிரங்கமாகவே கருத்துத் தெரிவித்து வருவதை பார்க்கும் போது சந்தேகம் வலுப்பெறுகிறது. 

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடியிருந்த தேசிய பிறைக்குழு தனது அறிவிப்பை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் முன் சிலர் தமது சொந்த சமூக வலைத்தளங்களிலும் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் ஊடகங்களிலும் விமர்சித்திருந்தனர். சில சமூகவலைத்தள செயற்பாட்டாளர்கள் முந்திக்கொண்டு பிறை தொடர்பில் பிழையான தீர்மானத்தை சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பி முஸ்லிம் சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி, கொழும்பில் உள்ள பெரிய பள்ளிவாசல் மீதான பிறைக்குழுவை குற்றம் சாட்டி, முஸ்லிம் சமூகம் மத்தியில் கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கும் பிறைக்குழுவுக்கும் எதிரான கருத்தியலை உருவாக்கி வந்தனர். இதனூடாக முஸ்லிம் சமூகத்தினரிடம் பிளவுபடுத்தும் கருத்தியல் மனப்பான்மையை உருவாக்கி முஸ்லிம் சமூகத்திடம் பாகுபாட்டை உருவாக்குவதே அவர்களின் அடிப்படை நோக்கமாகும்.

கிழக்கிலும், தெற்கிலும், வடக்கிலும், மேற்கிலும் உள்ள முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒரு சக்தியாக ஒன்றிணைய வேண்டிய இந்த நேரத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் மதக் கருத்தியல் பிரிவுகள் மூலம் முஸ்லிம் சமூகத்தை பிளவுபடுத்தி, இந்த ஒப்பந்த பிரிவினைவாத சித்தாந்தங்கள் மற்றும் முஸ்லிங்கள் ஒருபோதும் சோரம்போக கூடாது. மட்டுமின்றி இந்த விடயங்களில் மார்க்க, அரசியல் மற்றும் சிவில் தலைவர்கள் ஒன்றிணைந்து ஒரே சமூக கட்டமைப்பாக செயல்பட வேண்டும் என்றார்

VIDEOS

Recommended