• முகப்பு
  • இலங்கை
  • எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது எமது பிரதி நிதித்துவத்தினால் மட்மே முடியும்

எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது எமது பிரதி நிதித்துவத்தினால் மட்மே முடியும்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Oct 26, 2024, 6:39:26 AM

எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது எமது பிரதி நிதித்துவம் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்று கம்பஹா மாவட்ட ஜக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் எஸ்.சசிகுமார் தெரிவித்தார்.

ராகம பிரதேசச்தில் இடம் பெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தொடர்ந்து உரையாற்றுகையில் -

2014 ஆண்டில் இருந்து நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த போதும் போதுமான வாக்குகளை பாராளுமன்றம் செல்வதற்கு பெற்றுக் கொள்ள முடியாத நிலையே காணப்பட்டுவந்தது.இதற்கு ஒரு காரணம் நான் ஒரு தமிழ் பிரதி நிதி என்பதால் என்னவோ தெரியாது.

இருந்த போதும் கடந்த தேர்தலிலும் இன,மதம் கடந்து நீங்கள் வாக்களித்து முயற்சித்தீர்கள்,இதற்கு எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்.இம்முறை அந்த நிலைமாறியுள்ளதை கானுகின்றேன்.

இதற்கு காரணம் இன ஒற்றுமை இன்று உணரப்பட்டுள்ளதுடன்,எமது பிரதேசத்தில் வசித்துவரும்,கட்சிக்கும்,மக்களுக்கு துரோகமிழைக்காதவர்களை பாராளுமன்றம் ஆனுப்புவது பொருத்தம் என்று மக்கள் நினைக்க ஆரம்பித்துள்ளனர்.

இன்று எமக்கு உதவியாக நியோமல் பெரேரா அவர்கள் இருக்கின்றார்கள்.அவர் ஒரு சிறந்த தலைவர் அது போன்று மக்கள் பணி செய்ய தகுதியானாவர்.அவருடன் நாங்களும் எம்முடன் அவரும் எவ்வித பாகுபாடுகள் இன்றி இன்று ஒன்றாக மக்களிடம் வாக்கு கேட்டு செல்கின்றோம்.

துமிழர்களும்,இஸ்லாமியர்களும் ஒரே அணியில் சஜித் பிரேமதாசவின் ஆட்சியினை இன்று எதிர்பார்த்து நிற்கின்றனர்.original/whatsapp-image-2024-10-22-at-12
எதிர்வரும் 14 ஆம் திகதி நீங்கள் எம்மையும்,எமது கூட்டணியினையும் வெற்ற பெறச்செய்கின்ற போது நாம் உங்களுக்காக நிச்சயம் பணி செய்வோம் என்பதை உறுதியுடன் கூற விரும்புகின்றேன் என்றும் சசிகுமார் இதன் போது கூறினார்.

கம்பஹா மாவட்டத்தில் 18 இலட்சம் வாக்குகள் இருக்கின்றன.தமிழ் மக்களின் வாக்குகள் அன்னளவாக 50 ஆயிரம் வலையே இருக்கும்.அப்படியெனில் பாராளுமன்றப் பிரதி நிதித்துவம் பெற முடியாது.இம் முறை நான் போட்டியிடுவதில்லை என்று இருந்த போது எனக்கு தைரியம் ஊட்டியவர் நியோமல் பெரேரா அவர்கள்.

original/whatsapp-image-2024-10-18-at-13
இம்முறை சிங்கள, தமிழ்,முஸ்லிம் மக்கள் ஒரேணியில் சிறுபான்மை பிரதி நிதித்துவத்துக்கு வாக்களிக்க உள்ளதாகவும் இதன் போது மேலும் கூறினார்.

 

 

VIDEOS

Recommended