இரா.சம்பந்தன் அவர்களின் பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து திருக்கோணமலைக்கு விமானம் மூலம்
ஏ. எம். கீத்
UPDATED: Jul 5, 2024, 10:42:34 AM
காலம் சென்ற இலங்கை தமிழ் அரசு கட்சியின் பெருந்தலைவர் அமரர் இரா.சம்பந்தன் அவர்களின் பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து திருக்கோணமலைக்கு விமானம் மூலமாக கொண்டுவரப்பட்டது.
இன்று (05) அதற்காக இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருக்கோணமலை மாவட்ட கிளைத் தலைவர், கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள், பெருந்தலைவர் அமரர் இரா.சம்பந்தன் ஐயாவின் மகன் சம்பந்தன் சஞ்சீவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சீனக்குடா விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
குறித்த அமரர் சம்மந்தன் அவர்களின் பூதவுடல் திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்துக்கு வாகனம் மூலமாக அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது.இறுதிக் கிரியைகள் ஞாயிறன்று (07) இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பூதவுடலுக்கு அரசியல் பிரமுகர்கள்,மாவட்ட அரசாங்க அதிபர் ,உயரதிகாரிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு