சமிந்த லேனவ 'அபிவிருத்தி முன்னணி'யின் செயற்பாட்டு அங்கத்தவர் அல்ல
ஜே.எம். ஹாபீஸ்
UPDATED: Jul 10, 2024, 5:36:54 AM
சமிந்த லேனவ என்பவர் 'அபிவிருத்தி முன்னணி'யின் செயற்பாட்டு அங்கத்தவர் ஒருவர் அல்ல என்று அபிவிருத்தி முன்னணியின் (சங்வர்தன பெரமுன) செயலாளர் ஆனந்த ஸ்டீவன் தெரிவித்தார்.
கண்டியில் இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-
2020ம் ஆண்டு இடம் பெற்ற தேர்தலின் போது சமிந்த லேனவ என்பவர் கசகஸ்தானில் இருந்தார். அப்போது நாம் கற்றவர்களுக்கு முதலிடம் கொடுத்து எமது பட்டியலைத் தயாரித்தோம்.
சமிந்த லேனவ என்பர் எம்மிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவும் அவர் ஒரு கல்வி மானாக இருப்தாலும் அவரது பெயரையும் பட்டியலுக்கு உற்படுத்தினோம். அவரரது பெயர் எமது பட்டியலில் இருந்ததே தவிற அவர் எதுவித கட்சி செய்பாடுகளிலும் ஈடுபடவில்லை. எனவே அவரை எமது கட்சியின் செயற்பாட்டு அங்கத்தவராக கருத முடியாது.
ஆனால் அவரது பெயரை எமது பட்டியலில் அவரது அனுமதியுடன் சேர்த்தது மட்டுமே உண்மை.
அவர் எக்காலத்திலும் எம்முடன் சேர்ந்து அரசியல் செய்யவில்லை.
நாம் ஜனநாயகத்தை மதிக்கும் ஒரு கட்சி. நாட்டின் இறைமைக்கும் சுதந்திரத்திற்கும் குரல் கொடுப்பவர். 'அரகல' போராட்டத்தின் போதும் நாம் நாட்டின் ஜனநாயகத்திற்காக இணைந்து பங்களிப்பு செய்தோம். நிலைமை இப்படி இருக்க அவர் ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் படி கேட்டு வழக்கு தாக்கல் செய்தார்.
எம்மிடம் அது பற்றி எதுவும் அவர் கதைக்கவில்லை. அதே நேரம் எமக்கு அது பற்றி எதுவும் தெரியாது. அவரது தனிப்பட்ட கருத்ததாக அது இருக்கலாம்.
அபிவிருத்தி முன்னணி என்ற கட்சியானது சுதந்திரம் மற்றும் நேர்மை என்பவற்றின் அடி்பபடையில் அரசியல் செய்யும் ஒரு கட்சியாகும் என்றார்.