• முகப்பு
  • இலங்கை
  • தமிழ் மக்களின் மனநிலையை சஜித் புரிந்துகொண்டுள்ளார் – சசிகுமார்

தமிழ் மக்களின் மனநிலையை சஜித் புரிந்துகொண்டுள்ளார் – சசிகுமார்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Dec 13, 2024, 10:06:39 AM

 

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மனோ கணேசன், நியமிக்கப்பட்டுள்ளமையானது தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் சுப்ரமணியம் சசிகுமார் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

தமிழ் முற்போக்கு கூட்டனியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்டோருக்கு தேசியப்பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. இதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு தமிழரின் ஆதரவு அவசியமானது இதற்குப் பொருத்தமானவர் எமது தலைவர் மனோ கணேசன் மாத்திரமே. அவரின் உழைப்பு இன்றியமையாதது. அவருக்கான பாராளுமான உறுப்புரிமை என்பது அவருக்கானது. அது பொதுத்தேர்தலின் போதே கிடைத்திருக்க வேண்டும். காலம் தாமதமானாலும் எதிர்க்கட்சித் தலைவரின் முடிவு சரியானதாக அமைந்துள்ளது.

இவரின் இந்த முடிவுக்கும், எமது தலைவர் மனோ கணேசனுக்கும் கம்பஹா மாவட்ட தமிழ் மக்கள் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

VIDEOS

Recommended