• முகப்பு
  • இலங்கை
  • இணையத்தளத்தின் மூலம் வியாபார பதிவுகளை தொடங்குவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் - வடக்கு ஆளுநர் தெரிவித்தார்

இணையத்தளத்தின் மூலம் வியாபார பதிவுகளை தொடங்குவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் - வடக்கு ஆளுநர் தெரிவித்தார்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Jul 30, 2024, 11:54:40 AM

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவலுடன் இணைந்து ஆளுநர் செயலகத்தில் இன்று (30/07/2024) விசேட கலந்துரையாடல் நடத்தினார்.

இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன், யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எம்.பிரதீபன், ஆளுநரின் உதவிச் செயலாளர், சமுர்த்தி ஆணையாளர் நாயகம் மற்றும் யாழ் மாவட்டத்தில் சேவையாற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிறு தொழில் முயற்சியில் ஈடுபடுவோருக்கான வியாபார பதிவுகளில் காணப்படும் சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கால தாமதமின்றி வியாபார பதிவுகளை மேற்கொள்ள இணையதள பதிவு முறையை அறிமுகப்படுத்துவது சிறந்த செயல் என்றும், அதற்கான நடவடிக்கைகளை துரிதகதியில் முன்னெடுக்க வேண்டும் என்றும்  ஆளுநர் கூறினார்.

 பொதுச்சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்துவதும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

விசேட தேவையுடையோர் பொதுச் சேவைகளை எளிதில் அணுகக்கூடிய கட்டடங்களை உருவாக்கவும், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும்  ஆளுநர் கோரிக்கை விடுத்தார்.

 இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இராஜாங்க அமைச்சர்  அனுப பஸ்குவல், போக்குவரத்திற்கான பஸ்களை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், விதிமுறைகளை மீறிய பொதுநிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளின் பெற்றோர் அசுவெசும கொடுப்பனவை பெறுவதில் ஏற்படும் இடையூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டு, அவற்றை நிவர்த்திக்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.

 

VIDEOS

Recommended