• முகப்பு
  • இலங்கை
  • வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசாரம் செய்யத் தடை ; தேர்தல்கள் ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு

வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசாரம் செய்யத் தடை ; தேர்தல்கள் ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு

ஐ. ஏ. காதிர் கான்

UPDATED: Sep 5, 2024, 10:49:16 AM

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வீடு வீடாகச் செல்வதை உடனடியாகத் தடுக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு (4) உத்தரவிட்டுள்ளது.

 இதுபோன்ற பிரசாரங்கள் செய்வதைத் தடுக்க, 'பொலிஸார் நடமாடும் ரோந்துப் பணியை' அதிகரிக்கவும், ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

   குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வீடு வீடாகச் சென்று வருவதாக ஏராளமான புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

original/img-20240902-wa0045
 இதுபோன்ற செயல்கள், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு இடையூறாக இருப்பதாக, ஆணைக் குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, சட்ட விரோதமான முறையில் நடத்தப்படும் தேர்தல் அலுவலகங்கள் தொடர்பில், சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும், தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு மேலும் பணிப்புரை விடுத்துள்ளது.

 

VIDEOS

Recommended