சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கைது
ராமு தனராஜா
UPDATED: Jul 2, 2024, 9:36:09 AM
மட்டக்களப்பில் சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரத்தை சேர்ந்த இந்திரஜித் தென்னக்கோன் என்ற உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் கடமையாற்றும் குறித்த நபர் இன்று செவ்வாய்க்கிழமை சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்டமையால் சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி அவரை சோதனையிட முயன்றுள்ளார்.
எனினும் அவர் தன்னை சோதனையிட அனுமதிக்காததால் மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டு அதன்பின் அவரை சோதனையிட்ட போது 800 மில்லிகிராம் ஜஸ் போதைப்பொருளை அவர் மறைத்து வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு