சக்தி கிரவுன் ஆக பேராதனைப் பல்லைக்கழக மாணவி பிரனவி தெரிவு செய்யப்பட்டார்
அஷ்ரப் ஏ சமத்
UPDATED: Sep 6, 2024, 5:43:52 PM
சக்தி தொலைக்காட்சியின் தயாரிப்பில் இவ் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து ஆரம்பித்து கடந்த வாரம் முடிவுற்ற இளம் பாடகர்கள் இனம் கண்டு அதில் திறமைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் 6000 இளைஞர் யுவதிகள் பாடக்கூடிய ஒன்று திரட்டி அவர்களை இனம் காண நாட்டின் நாலா பாகத்துக்கும் சக்தி தொலைக்காட்சி சென்று திறமைகளை தெரிபு செய்து இறுதிப்போட்டிக்கு; 6 பேர்களை தெரிவு செய்துள்ளனர்.
முதல் தரமான சக்தி கிரவுன் ஆக தெரிவு செய்யப்பட்ட பேராதனைப் பல்லைக்கழக கலைப்பிரிவில் பயிலும் மாணவி செல்வி பிரனவி தெரிவு செய்யப்பட்டார்.
மேற்படி தெரிவில் 6 பாடகர்கள் சக்தி தொலைக்காட்சி மற்றும் எம் என்டர்டைன்மென்ட் கம்பனியுடன் ஓர் ஒப்பந்தம் நேற்று 5ஆம் திகதி ரத்மலானையில் உள்ள ஸ்டின் கலை ஸ்டுடியோவில் நடைபெற்றது.
சக்தி இசைப் பாட்டுப் போட்டியில் முறையே தெரிபு செய்யப்பட்ட 1 – 6 கலைஞர்கள் சக்தி கிரவுன் உட்பட ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இக் கைச்சாத்திடல் நிகழ்வில் மஹராஜா குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் செவ்வின் டேனியல் மற்றும் எம். என்டடைட்ல்மென்ட் கம்பனியின் பணிப்பாளர் பெற்றிக் திசாநாயக்க ஆகியோருக்கும் சக்தி கிரவுன் 6 பாடகர்களான பிரனவி, அர்ச்சய,ஆக்கஸ் மதன், மயுரன், கௌகிகரன், செட்செபசன் ஆகியோர்களுக்கிடையில் நடைபெற்றது,
இக் கலைஞர்கள் சக்தி குழுமத்தின் தயாரிக்கப்படுகின்ற உள்ளூர் பாடல்களை இயற்றி; இசையமைத்து அப்பாடல்களை உலகிற்கு கொண்டு செல்லும் எனவும் இதனால் எமது கலைஞர்கள் தமிழ் பாடல்கள்; திறமைகளை வெளிக்கொணர படும்.என மஹராஜ குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் டேனியல் அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.