• முகப்பு
  • இலங்கை
  • கிழக்கின் பொத்துவில் அருகம்பை பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு

கிழக்கின் பொத்துவில் அருகம்பை பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Oct 23, 2024, 6:50:29 PM

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் தொகுதியில் அமைந்திருக்கின்ற அருகம்பேயில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை அடுத்து இலங்கையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான தகவல்களை இந்தியா புலனாய்வுத்துறை இலங்கைக்கு தெரிவித்துள்ளதாகவும் சுமார் 50 இலட்சம் ரூபா வீதம் இருவருக்கு நிதி வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

original/img-20241023-wa0131
மேலும் இதே தொடர்பில் பாதுகாப்பு தரப்புகளை மேற்கோள் காட்டி இலங்கையின் பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன.

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலாசனது, உல்லாச பயணிகளை கவரும் வகையில் அமைந்திருக்கும் இயற்கை கடற்கரை பிரதேசமாகும். இங்கு வரும் உல்லாச பயணிகள் நீச்சல் மற்றும் ஒளிக்குளிப்பு அலைச்சறுக்கள் போன்ற பொழுதுபோக்கு நிகழ்வுகளில் கலந்து கொள்வது வழமையான நிகழ்வாகும்.

 இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளி நாட்டவர்கள் அதிகமாக இந்த பிரதேசத்தை பயன்படுத்துவது வழமையான ஒரு நிகழ்வாக மாறி வருகிறது. 

original/1729446076363

குறிப்பாக இஸ்ரேல் நாட்டவர்கள் இந்த பிரதேசத்தில் அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக காணப்படுவதாக உல்லாச பயண அதிகார சபை தெரிவித்து இருக்கிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் அறுகம்பே பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கு அறிவித்துள்ளன.

original/img-20241023-wa0059
இது தொடர்பான தாக்குதல் அக்டோபர் 19 முதல் 23 வரை நடத்தப்படலாம் என இந்திய உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த தகவலை அடுத்து இலங்கை பாதுகாப்பு தரப்பினர் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended