ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Sep 6, 2024, 5:10:33 AM
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த மூன்று தினங்களாக இடம் பெற்றுள்ளது. இன்றைய தினம் உறுதி தினமாக இந்த வாக்களிப்பு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தல் கடமைகளில் ஈடுபடுகின்ற அரச ஊழியர்கள் வாக்களிப்பதற்காக மேற்படி மூன்று தினங்களை ஒதுக்கி இருப்பதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ஹேரத் தெரிவித்தார்.
அந்த வகையில் அரச அதிகாரிகள் தங்களது வாக்குகளை அளித்துள்ளதாகவும் அவ்வாறு வாக்குகளை அளிக்க தவறும் அதிகாரிகளுக்கு பிரிதோறு தினத்தை ஒதுக்கி கொடுப்பதற்கு தேர்தல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதே வேளை வாக்குகள் அளிக்கப்பட்ட முழுமையான வாக்கு பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதற்காக உரிய இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு