• முகப்பு
  • இலங்கை
  • போதிய வளங்கள் இருந்தும் சர்வதேச சதியில் அரசியல் தலைமைகள் சிக்கியுள்ளதால் நாட்டை வளம்படுத்த முடியாதுள்ளது

போதிய வளங்கள் இருந்தும் சர்வதேச சதியில் அரசியல் தலைமைகள் சிக்கியுள்ளதால் நாட்டை வளம்படுத்த முடியாதுள்ளது

ஜே.எம்.ஹாபீஸ்

UPDATED: Oct 22, 2024, 4:40:22 AM

எமது நாட்டை பொருளாதாரரீதியில் உயர்தக் கூடிய பௌதீக வளங்களும், அவற்றை நிர்வகிக்க் கூடிய ஆற்றல் படைத்தவர்களும் நம் நாட்டில் உள்ளனர். நாம் பெற்றுள்ள கடன்கள் எல்லாவற்றையும் திருப்பி ஒப்படைக்கூடிய மூல வளங்கள் எமது நாட்டில் உள்ளன. இருப்பினர் எமது அரசியல் தலைவர்கள் சர்வதேச ரீதியலான அரசியல் சதியில் சிக்கி உள்ளதால் நாட்டை வளம்படுத்த முடியாதுள்ளது என அபே ஜனபல கட்சியின் தலைவர் டாக்டர் கீர்த்தி விக்ரமரட்ன தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை பின்னேரம் கண்டி டெவோன் ஹோட்டலில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது-

நான் புதிய சக்தி வளங்களை கையாள்கின்ற அமைப்புக்க்ள் கலவற்றின் தலைவரக இருந்துள்ளேன். அதே நேரம் ஒரு பொறியிலாளராகவும் உள்ளேன். எனக்கு பல விஞ்ஞான முதுமாணிப்பட்டங்கள் உள்ளன.

original/1729482063399
அதே நேரம் நான் ஒரு முதலீட்டாளராகவும் இருந்து வருகிறேன், இதன் அடிப்படையில் நான் இலங்கையின் பொருளதாரத்தை வளம் படுத்தும் அம்சங்கள் பலவற்றை கண்டறிந்து வெளிப்படுத்தி உள்ளேன்.

தற்போதைய ஜனாதிபதியுடன் இதற்கு முன்னர் நீண்ட கலந்துரையாடல்களை நான் நடத்தி உள்ளேன். 

நாடு தற்போது பெற்றுள்ள கடன்கள் எல்லாவற்றையும் திருப்பி ஒப்படைக்கூடிய மூல வளங்கள் எமது நாட்டில் உள்ளன. 

உாரணத்திற்கு தற்போது முழு உலகமும் மாற்று சக்தி வளங்களைத் தேடுகின்றன. எனவே எதிர் காலத்தில் பெற்றோலியப் பெபருட்கள் இல்லாத வாகனங்கள் கூடுதலாக பாவணைக்கு வர உள்ளது.

அதற்கு மின் கலங்கள் (பெற்றறிகள்-Battery) தேவை. மின் கலங்களைத் தயாரிக்க பிரதான மூலப் பொருளாக சிலிக்கன் உள்ளது. உலகில் எங்குமில்லாத அளவி சிலிக்கன் படிவுகள் இலங்கையில் உள்ளன. சாதாரணமாக நாம் நடமாடும் இடமெல்லாம் எமது காலில் தடடுப்படும் ஒரு பொருள்தான் திருவனா கற்கள் எனப்படும் வென்நிற படிமங்கள்.

இதை அறைத்து ‘பவுடர்’ செய்து என்னால் ஏற்றுமதி செய்ய முடிகிறது. இதைதான் சிலிக்கன் என்கிறோம். இதிலிருந்து சிலிக்கன் பெற்றறிகள் தயாரிக்கப்படுகின்றன. சூரிய மின் கலங்களுக்கு முக்கிய மூலப் பொருள்தான் சிலிக்கன்.

original/1729409739800
மிகக் குறைந்த விலைக்கு சிலிகனை ஏற்றுமதி செய்து பல கோடி ரூபாய்களுக்கு சிலிகன் சேர்க்கப் பட்ட மின் கலங்களை (சோலாப் பெணல்) இறக்குமதி செய்கிறோம். 

இதே போல் மின் கல உற்பத்தியில் காபன் பிரதான மூலப் பொருளாகும். சிறந் காபன் காரீயமாகும். குருணாகல் பிரதேசத்தில் எனக்கு மூன்று காரியச் சுரங்கங்கள் உள்ளன. இதிலிருந்து இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவற்றுக்கு ஆரம்ப மூலதனம் மட்டுமே தேவை. பின்னர் தோண்டத் தோண்ட அது வந்து கொண்டிருக்கும். இந்த அடிப்படையில் எனக்கு இவை தெடர்பாக ஆற்றல்கள் உணள்ளன. இதுபோல் எப்பாவல பொஸ்பேற், புல்மோட்டை இல்மனைட், மத்திய பிரதேசத்தில் டொலமைட், மன்னார் பிரதேசத்தில் எரிவாயு, இயறகை நீர்வளம் என அடுக்கிக் கொண்டே போகலாம். 

மத்திய மலைநாட்டில் பைனஸ் மரங்களை அகற்றி விட்டு இலங்கை்குப் உரித்தான பலா, மா, ஈரப்பலா போன்ற பொருத்தமான மரங்களை நாட்டி நீர் வளத்தைப் பேணுவதன் ஊடாக எமது நீரேந்து பிரதேசங்களின் வினைத் திறனை அல்லது மழை வீழ்ச்சியை அதிகரிக்க முடியும். இதன் காரணமாக நீர்மின் உற்பத்தியின் மூலம் தன்னிறைவு காணலாம்.

இதன் விளைவாக பெற்றோல், டீசல் போன்றவற்றகை் கொண்டு எமது ‘டேர்பைன்களை’ இயக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மேலும் எமது மூலப் பொருட்களைக் கொண்டு(சிலிக்கன், காபன்) குறைந்த விலையில் சூரிய கலங்களை (சோலா பெணல்) அமைக்கலாம். எதுவித செலவும் இன்றி மின்சாரத்தைப் பெறக் கூடிய வளம் எம் நாட்டில் உண்டு.

original/whatsapp-image-2024-10-16-at-20
அதேபோல் காற்றாலை மூலம் மின் உற்பத்திசெய்யும் நிலையும் உண்டு. இப்படியாக பட்டியல் படுத்திக் கொண்டு போகலாம். இவ்வாறு இயற்கை சக்தி வளங்கள் மற்றும் புதிய மின் பிரப்பாக்கிகள் கண்டு பிடிப்பதன் ஊடாக எமது நாட்டை வளப்படுத்தலாம். 

இது பற்றி முன் யோசனையை நான் 2015ம் ஆண்டு முதல் முன்வைத்தேன். ஆனால் எமது அரசியல் வாதிகள் வெளிநாட்டு சக்திகளின் வலையில் சிக்கி அப்படி ஏதும் மேற்கொள்ள இடமளிக்காது நாட்டின் வளங்களை தொடர்ந்து சுரண்டும் வேலையைக் ஒத்துழைப்பு வழங்கு கின்றனர்.original/1729529555648
எமது நாட்டில் புவியியல் மைவிடம் மற்றும் மறைந்து காணப்படுகின்ற இயறகை வளங்கள்போன்றன பற்றிசெர்தேச சக்திகளுக்கு நன்கு தெரியும். எனவே எம்மை சுயமாக முன்னேற விடமாட்டார்கள். சதி செய்வார்கள். 

இப்படியான விடயங்களை இனம்கண்டு நாட்டை வளம்படுத்பவர்களையே பாராளு மன்றத்திற்கு அனுப்ப வேண்டும். அதற்கான இயலுமையும் ஆற்றலும் எம்மிடம் இருக்கிறது. அதனை மேற்கொள்ளக் கூடிய மூலப் பொருட்களுக்கான வளங்கள் நம்நாட்டில் இருக்கின்றதன. எனவே வாக்காளர்கள் எமது நாடு சென்று கொண்டுள்ள அரசியல் அலையில் சிக்கி அதே திசையில் செல்லாது, சரியான தெரிவை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

 

VIDEOS

Recommended