• முகப்பு
  • இலங்கை
  • பன்மைத்துவம் உள்ளடக்கம் மற்றும் அரசாங்க கொள்கை கட்டமைப்புக்கள்

பன்மைத்துவம் உள்ளடக்கம் மற்றும் அரசாங்க கொள்கை கட்டமைப்புக்கள்

எம்.ஏ.ஏ.காசிம் - முந்தல்

UPDATED: Dec 11, 2024, 8:27:07 AM

இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் புத்தளம் மாவட்ட அரச அதிகாரிகளுக்கான "பன்மைத்துவம் உள்ளடக்கம் மற்றும் அரசாங்க கொள்கை கட்டமைப்புக்கள்" தொடர்பான செயலமர்வு நேற்றும் இன்றும் கல்பிட்டி உள்ள 'கெபிடல் வின்' ஹோட்டலில் நடை பெற்றது.

மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் 40 பேர் கலந்து கொண்டனர்.

original/dofoto_20241211_135610086
இந்த இரண்டு நாள் செயலமர்வில் கலந்து கொண்ட அதிகாரிகளுக்கு புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் மற்றும் மேலதிக மாவட்ட செயலாளர் புபுதுகா எஸ்.பண்டாரவும் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி விரிவுரைகளை நடாத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended