பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய சம்பளம் சம்பந்தமான வழக்கு நவம்பர் மாதத்திற்கு பிற்போடப்பட்டது
ராமு தனராஜா
UPDATED: Jun 30, 2024, 1:26:16 PM
பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய சம்பளம் சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு நவம்பர் மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது. எது எவ்வாறு இருப்பினும் கூட நான் மீண்டும் மீண்டும் தெரிவிக்கின்றேன். எமது மலையக மக்கள் இந்த நாட்டை நேசித்த ஒரு பரம்பரை.
இன்றைக்கு 1700 ரூபாய் என்பது ஒரு சாதாரண வாழ்கை செலவு நான் பாராளுமன்றத்தில் கேட்டிருந்தேன் 2350 ரூபாய். இன்றைய வாழக்கை செலவிற்கேற்ப 2350 ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால் தொழில் அமைச்சு 1700 ரூபாய் என கூறியிருக்கின்றார்கள்.
பரவாயில்லை என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் நேற்று மாலை பசறை எல்டப் கிகிரிவத்தை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் போது தெரிவித்தார்
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
1700 ரூபாய் வர்த்தமாணியில் வெளியிடப்பட்டுள்ளது. அது ஒரு பிரச்சினையும் கிடையாது. தான் தன் தோட்டத்தில் உள்ள இலாபத்தை ஐந்து பரம்பரையாக சம்பாதித்து கொடுத்த ஒரு தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக பெருந்தோட்ட கம்பனிகள் இன்று நீதிமன்றம் செல்வது என்பது அவர்கள் வெட்கி தலை குனிய வேண்டும்.
எங்களுக்கு தெரியும் சர்வதேச ரீதியில் இறப்பரின் விலை , தேயிலையின் விலை ,சிலோன் டீயின் டிமான்ட் அந்த நாமம் அதை பெற்றுக் கொடுத்த இந்த நாட்டை நேசித்த எமது மக்களாகிய தோட்ட தொழிலாளர்கள்.
அத்துடன் அரசாங்கத்திற்கும் பாரிய பொறுப்பு உள்ளது கமபனிகளுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது.
ஆகவே இந்த 1700 ரூபாய் சம்பந்தமான வழக்கு முடிவிற்கு வரும் போது இங்கு வாழ்க்கை செலவு 5000 ரூபாயாக உயர்ந்திருக்கும். ஆகவே இது நடைமுறைக்கு சாத்தியப்படும் வகையில் மிக விரைவில் பெருந்தோட்ட கமபனிகளும் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்து இந்த பெருந்தோட் தொழிலாளர்களின் சம்பளத்தை இழுத்தடிப்பு செய்யாமல் இந்த 1700 ரூபாய் சம்பளத்தை இன்று உள்ள வாழ்க்கை செலவிற்கு ஏற்ப கொடுப்பதற்கு கம்பனிகள் முன்வர வேண்டும்.
ALSO READ | மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத் திட்டத்தில், போட்டி மிகு விலைமனு கோரல் இன்றி கோடிக்கணக்கான பணம் மோசடி அரசை சாடும் சஜித்
இருப்பினும் கடந்த காலங்களில் 2 வர்த்தமானிகள் வெளியிடப்பட்டிருந்தன. இருப்பினும் கடந்த மே மாதம் 21 திகதி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியை அமுல்படுத்துமாறு நீதிமன்றமும் கூறியுள்ள நிலையில் எங்களுக்கு மே மாதம் 21ம் திகதியில் இருந்து 1700 ரூபாய் சம்பளம் வேண்டும். இல்லையேல் தொழில் பிணக்கு தொழில் பிரச்சினை கூடுதலாக பெருந்தோட்ட பகுதிகளில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது .
அப்படி நடக்கும் போது பெருந்தோட்ட கமபனிகளுக்கு தோட்டங்களை நடத்தி செல்ல முடியுமா என்று எங்களுக்கு தெரியாது.
ஆகவே அரசாங்கத்திற்கும் தர்ம சங்கடம் இல்லாமல் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கும் மதிப்பளித்து வர்த்தமானியையும் ஏற்று இந்த 1700 ரூபாயை மே மாதம் 21 ம் திகதி முதல் கொடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.