• முகப்பு
  • இலங்கை
  • தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு முறையாக சலுகைகளை வழங்கவில்லை - தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு முறையாக சலுகைகளை வழங்கவில்லை - தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கௌசல்யா

UPDATED: May 11, 2024, 11:12:42 AM

லிந்துலை என்போல்ட் தோட்டத்தை சேர்ந்த 850 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று என்போல்ட் தோட்ட காரியாலயத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு முறையாக சலுகைகளை வழங்கப்படவில்லை எனவும். தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு தேயிலை தூள் மாதாந்தம் வழங்க முடியாது என தோ ட்ட அதிகாரி தெரிவித்ததாகவும். தேயிலை செடிகளை முறையாக பராமரிக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தோட்ட அதிகாரி தோட்ட தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களை தரம் குறைவாக பேசுவதாகவும். அடிப்படை வசதிகளை கூட அதிகாரிகள் செய்து கொடுக்கவில்லை என தெரிவித்தே இந்த கவனியிருப்பில் ஈடுபட்டனர்.

 அதிகமான தொழிலாளர்கள் தோட்ட காரிகாலத்துக்கு முன்பதாக ஒன்று கூடி கூட்டா அதிகாரிக்கும் தொழிலாளர்களுக்கும் மத்தியில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுத்த போதிலும் அது வாய் தர்காமாக மாறியதால் எவ்வித முடிவும் எட்டாத நிலையில் சம்பவ இடத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஏ.பி. சக்திவேல் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவர் எஸ்.சிவானந்தன் உள்ளிட்ட கட்சியில் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு தோட்ட நிர்வாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தோட்ட தொழிலாளர்கள் நிர்வாகத்திடம் முன்வைத்த கோரிக்கைகளை தமக்கு செய்து கொடுக்க முடியாது என தோட்ட நிர்வாகம் அறிவித்ததால். பேச்சுவார்த்தைகள் இழுப்பரியாகின அதன் பின்பு தொழிற்சங்க பிரதிநிதிகள் இப்பிரச்சினை தொடர்பாக பெருந்தோட்ட கம்பெனிகளின் அதிகாரிகளுக்கு அறிவித்து அவர்களோடு கலந்துரையாடி இதற்கு தீர்வு பெற்று தர முடியும் என தொழிலாளர்கள் மத்தியில் தெரிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

இருந்த போதிலும் தோட்ட அதிகாரி மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் இத்தோட்டத்தில் இருந்து வெளியேறும் வரை தாம் தொழிலுக்கு செல்லப் போவதில்லையென தோட்ட அதிகாரிகளுக்கு எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.

VIDEOS

Recommended