• முகப்பு
  • இலங்கை
  • சமூகத்தோடு ஒன்றித்து பயணிக்கும் ஊடக சமூகத்துக்கு கௌரவத்தையும் அவர்களது நிலையான ஒரு பெருமானத்தையும் ஏற்படுத்த திட்டம்

சமூகத்தோடு ஒன்றித்து பயணிக்கும் ஊடக சமூகத்துக்கு கௌரவத்தையும் அவர்களது நிலையான ஒரு பெருமானத்தையும் ஏற்படுத்த திட்டம்

இர்ஷாத் ரஹ்மதுல்லா /ரஸீன் ரஸ்மின்

UPDATED: Jun 16, 2024, 2:04:01 AM

சமூகத்தோடு ஒன்றித்து பயணிக்கும் ஊடக சமூகத்துக்கு கௌரவத்தையும் அவர்களது நிலையான ஒரு பெருமானத்தையும் ஏற்படுத்தும் வகையில் தொழிலாளர் சட்டத்துக்குள் அங்கீகாரம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

original/img-20240615-wa0118
வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறைக்கு அறிவுபூர்வமான ஊடக நுழைவு எனும் கருப்பொருளின் கீழ் புத்தளம் மாவட்டத்தில் ஊடக பணியகத்தை ஸ்தாபித்தலும், ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்றும்  (15) சிலாபம் Far Inn Beach ஹோட்டலில் இடம்பெற்றது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் ஆலோசனையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

original/img-20240615-wa0121


இந்த செயலமர்வில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, மனித கடத்தல் வியாபாரத்தை கண்டறிதலும் அதனை தடுப்பது தொடர்பில் சட்டத்தரணி ரொஹான் விஜேசேன தெளிவுபடுத்மினார்.

original/img-20240615-wa0116
அத்துடன், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் நேர்மறையான அறிக்கையிடல் சம்பந்தமாக திரைக்கதை எழுத்தாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான சாமர பிரசன்ன கொடிதுவக்கு விளக்கப்படுத்தினார்.

original/img-20240615-wa0117
இந்நிகழ்வில் சட்ட ரீதியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்று நாடு திரும்பியவர்களின் வீடியோ காணொளியை ஆவணமாக தயாரித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சமர்ப்பித்த ஆறு ஊடகவியலாளர்களுக்கு காசோலலைகளும் அமைச்சரினால் வழங்கப்பட்டன.


மேலும், இந்த செயலமர்வில் கலந்துகொண்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கு ஊடகம் என எழுத்து பொறிக்கப்பட்ட பேக் (Bag) ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இதேவேளை, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் புத்தளம் மாவட்டத்திற்கான “ஜயகமு ஸ்ரீலங்கா" எனும் கருப்பொருளில் நடமாடும் சேவையொன்று (14),(15)  திகதிகளில் சிலாபம் ஷேர்லி கொரேயா விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

original/img-20240615-wa0122
டிஜிட்டல் மயமாக்கலுடன் தொடர்புடைய புதிய தொழில் உலகத்திற்கு ஏற்ற ஸ்மார்ட் தொழிலாளர்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். 

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காராவின் எண்ணக்கருவில் நாடளாவிய ரீதியில் இத்தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடகம் என்பது சமூகத்திற்கு மிகவும் முக்கியமானது அவ் ஊடகவியலாளர்கள் கௌரவ படுத்தப்பட வேண்டும். அது போன்று அவர்களின் எதிர்காலம் தொடர்பிலும் முக்கியமான சில தீர்மானங்கள் நிறைவேற்றப்படுதல் அவசியம் என்றும் கூறினார்.

இந்த நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நானயக்கார, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்ன, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் சச்சிகோ விஜேயரத்ன, வடமேல் மாகாண முகாமையாளர் பத்மினி விஜேசிங்க, பணிப்பாளர் சபை உறுப்பினர்களான ஜெப் குணவர்தன, முகம்மது அஸாம், திரைக்கதை எழுத்தாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான சாமர பிரசன்ன கொடிதுவக்கு, உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 

 ( அமைச்சரின் சிங்கள மொழியிலான முழுமையான ஒளி வடிவம் இணைக்கப்பட்டுள்ளது )

 

VIDEOS

Recommended