இளைஞர்களை தொழில் முயற்சியாளர்களாக மாற்றும் திட்டம்
எஸ்.எம்.எம்.முர்ஷித்
UPDATED: Jul 12, 2024, 5:46:43 AM
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவிரவின் வழிகாட்டலில் இளைஞர்கiளை தொழில் முயற்சியாளர்களாக மாற்றும் திட்டத்தில் 'விவசாய தொழில் துணைவோர் கிராமம்' என்ற திட்டம் நாடலாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டு பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் காகிதநகர் கிராம சேவகர் பிரிவு ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்திகுழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்வின் சிபாரிசின் பேரில் தெரிவு செய்யப்பட்டள்ளது.
ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் 120 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்டு 'விவசாய தொழில் துணைவோர்' தொடர்பான அறிவுறுத்தல் கூட்டம் இன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.ஸனீர், பிரதேச செயலக பிரதி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ் மற்றும் பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.