• முகப்பு
  • இலங்கை
  • அம்பாறை தமிழர்களை நடுத்தெருவில் நிற்க வைக்கும் முயற்சியில் பிள்ளையான் - முன்னாள் பா.உ கோடீஸ்வரன்

அம்பாறை தமிழர்களை நடுத்தெருவில் நிற்க வைக்கும் முயற்சியில் பிள்ளையான் - முன்னாள் பா.உ கோடீஸ்வரன்

ராமு தனராஜா

UPDATED: Oct 28, 2024, 2:49:19 AM

அம்பாறை மாவட்ட தமிழர்களின் பிரச்சனையில் இதுவரையில் குரல் கொடுக்காத அன்றைய முதலமைச்சராக இருந்த பிள்ளையான் இன்று தமிழர்களை தெருவில் நிற்க வைக்கும் நோக்கில் அம்பாறை மாவட்டத்தில் களம் இறங்கியிருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் கவீந்ரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

கல்முனையில் இன்று இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். கடந்த காலத்தில் பாராளுமன்ற பிரதிநிதிதுவம் இழந்த போது தமிழரசு கட்சி அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் அவர்களை அனாதையாக விடக்கூடாது அவர்களை கௌரவப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தலைவர், பொதுச்செயலாளர் ஆகியோர் பின்னடைவு அடைந்த போதிலும் தங்களுக்கு கிடைத்த ஒரே ஒரு தேசிய பட்டியல் அங்கத்துவத்தினை அம்பாறை மாவட்டத்திற்கு கொடுத்து கௌரவப்படுத்தி இருந்தது. எனவே ஒவ்வொரு தமிழ் மக்களும் இந்த கட்சிக்கு கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

 

2024 ம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் ஒரு பிரதிநிதித்துவத்தை இழக்குகின்ற போது அதனால் ஏற்படுகின்ற விளைவானது மிகவும் பாரதூரமாக இருக்கும். அந்த நிலையினை அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் மூச்சு விட முடியாத ஒரு நிலையாகவே நான் கருதுகிறேன்.

 

இந்த பொது தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் வரவில்லை என்றால் எந்த ஒரு காலகட்டத்திலும் தமிழ் பிரதிநிதித்துவம் அம்பாறை மாவட்டத்திற்கு வராது என்பதை நான் உறுதியாக கூறுகிறேன். இப்படி ஒரு நிலை ஏற்படுமாக இருந்தால் எதிர்வரும் காலத்தில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அடிமையாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படும் என்பதை அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பிரதிநிதித்துவம் இழக்கப்படும் பட்சத்தில் முஸ்லிம்களிடம் கையேந்தி நிற்கும் நிலை ஏற்படும் என்பதை அம்பாறை தமிழர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

 original/whatsapp-image-2024-10-22-at-17
தமிழ் தேசிய கூட்டமைப்பு அம்பாறை மாவட்டத்திற்கு என்ன செய்தது என கேள்வி கேட்கும் கட்சிகளுக்கு மீண்டும் மாறி அதே கேள்வியை கேட்குமாறு கூறிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பிர் கவிந்திரன் கோடீஸ்வரன், முதலமைச்சராக இருந்த பிள்ளையான் அம்பாறை மாவட்டத்திற்கு என்ன செய்து இருக்கிறார்.

அம்பாறை மாவட்டத்திற்கு அபிவிருத்திக்காக ஏதேனும் ஒரு சதம் செலவழித்து இருக்கிறாரா? அதேபோன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரச்சினைகளுக்கு எப்போதாவது குரல் கொடுத்திருக்கின்றாரா? என கேள்வி எழுப்பியதோடுஅம்பாறை மாவட்டத்தில் இம்முறை படகு சின்னம் களம் இறக்கப்பட்டிருப்பது இங்கிருக்கும் பிரதிநிதித்துவத்தை இழக்க செய்து இங்குள்ள தமிழர்களை நிராயுதபாணியாக்குவதே நோக்கமாகும். நடுத்தெருவில் இந்த மக்களை நிக்க வைக்கும் ஒரே நோக்கத்திற்காகவே அம்பாறை மாவட்டத்தில் களம் இருக்கிறார்கள். என சுட்டிக்காட்டியிருந்தார்.

 

25 வருடமாக கபினட் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா அம்பாறை மாவட்டத்திற்கு எவ்வித காரியங்களும் இதுவரையில் செய்யப்படாத நிலையில் இப்போது பொது தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் களம் இறக்கி இருக்கிறார். இங்கு சிறிதளவு வாக்கை பெற்றுக் கொண்டு அம்பாறை தமிழர்களின் வாக்குகளை சூறையாடி தனது சகாக்களில் ஒருவரை தேசியப் பட்டியலில் நிரப்புவதற்காக அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கி இருக்கிறார். என கூறியிருந்தார்.

தோற்கப் போகிறோம் என்று தெரிந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து சைக்கிளில் அம்பாறை மாவட்டத்திற்கு வருகிறார்கள். யாழ்ப்பாணத்தில் ஒரு பிரதிநிதித்துவத்தை எடுப்பதற்காக இந்த மக்கள் பலிக்கடா வா? என மேலும் அவர் இனிய கட்சிகளின் நிலைப்பாடு குறித்தும் தெளிவுபடுத்தினார்.

 

 

VIDEOS

Recommended