• முகப்பு
  • இலங்கை
  • வைத்திய சிகிச்சயினை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் வீடு திரும்பினார்

வைத்திய சிகிச்சயினை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் வீடு திரும்பினார்

ஜே.எம். ஹாபீஸ்

UPDATED: Jun 13, 2024, 6:15:18 AM

கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் குனதிலக ராஜபக்ச அவர்கள் வைத்திய சாலையில் இருந்து வீடுதிரும்பியுள்ளார்.

ஆளும் கட்சி பாராளுமன்ற அங்கத்தவர்களது குழுக் கூட்டத்தின் போது கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான குனதிலக ராஜபக்கச மற்றும் மகிந்தாநந்த அலுத்கமகே ஆகியோர்களுக்கிடையே ஏற்பட்ட கைகளைப்பில் குனதிலக ராஜபக்ச காயமடைந்து நாராஹேன்பிட்டிய இராணுவ வைத்திய சாலையில் சிகிட்சை பெற்று வந்தார்.

அவரது காலில் முறிவு ஒன்று ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. மூன்று மணித்தியாலயங்களுக்கு மேற்பட்ட நேரம் சத்திர சிகிட்சை மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்த்க்கது. 

தற்போது அவர் வீடு திரும்பியுள்ளபோதும் வைத்திய ஆலோசணைக்கேற்ப ஓய்வில் இருக்கப் பணிக்கப்பட்டுள்ளார்.

 அண்மையில்  இடம்பெற்ற ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் இருதரப்புக்குமிடையில் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.

 இதனை அடுத்து மகிந்தானந்த அழுத்தகமஜகே  தன்னை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் முறையிட்டிருந்தார். 

 

VIDEOS

Recommended