• முகப்பு
  • இலங்கை
  • காரைதீவில் முன்னால் தவிசாளர் தலைமையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி 

காரைதீவில் முன்னால் தவிசாளர் தலைமையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி 

ராமு தனராஜா

UPDATED: May 15, 2024, 12:41:40 PM

Sri Lanka News

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை அனுஸ்டிக்கும் பொருட்டு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் செயற்பாடு காரைதீவில் இன்று காலை இடம்பெற்றது.

Today Sri Lanka News

காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் தலைமையில் குறித்த கஞ்சி வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு காரைதீவு சந்தை கட்டிட தொகுதிக்கு முன்னால் இடம்பெற்றது.

இலங்கை செய்திகள்

இதன்போது சக்தி மீன்பிடி சந்தைப்படுத்தல் கூட்டுறவு சங்கத் தலைவர் கோபால், சிவில் செயற்பாட்டாளர்களான விநாயகம் விமல் நாதன், கணபதிப்பிள்ளை கரிசன் ,ஆலய தர்மகர்தாக்கள் , பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Breaking Sri Lanka News

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடக்கு, கிழக்கு மற்றும் சர்வதேச நாடுகளில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதனைத் தமிழின அழிப்பு வாரம் என பிரகடணப்படுத்தி வடக்கு, கிழக்கில் சிவில் அமைப்புகள் இந்நினைவேந்தலை அனுஸ்டித்து வருகின்றது .

இந்த நிலையில் நேற்றயதினம் கல்முனை பாண்டிருப்பு பிரதேசத்தில் நடைபெறவிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்விற்கு முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் உள்ளிட்ட 5 பேருக்கு நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended